Header Ads



கைது உத்தரவையும் மீறி, இஸ்லாமிய உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற சூடான் அதிபர்


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவையும் மீறி சூடான் அதிபர் உமர் ஹசன் அல் பஷிர் இந்தோனேசியா நாட்டுக்கு வந்துள்ளார்.

மேற்கு சூடானில் உள்ள மேற்கு டர்பர் பகுதியில் ஏற்பட்ட புரட்சியை ஒடுக்க ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்றதாக வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2009-2010 ஆண்டுகளில் உமர் ஹசன் அல் பஷிருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனால், கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து அவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாமல் இருந்துவந்தார். ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அங்கத்தினராக இடம்பெறாத சீனாவுக்கு மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று வந்தார். 

இதேபோல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அங்கத்தினராக இடம்பெறாத இந்தோனேசியா தலைநகரான ஜகர்தாவில் நடைபெறும் சர்வதேச இஸ்லாமிய கூட்டுறவு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. கைது செய்யும் உத்தரவையும் மீறி ?? என்ன கட்டுரையாசிரியரே ஏதாவது தலைப்பு போடவேண்டும் என்பதற்காக இந்த தலைப்பை போட்டீர்களா அல்லது உண்மையிலேயே உங்களுக்கு......
    அவரை கைது செய்யமுடியாது /மாட்டார்கள் என்று தெரிந்துதானே சர்வதேச குற்றவியல் அங்கத்தினராக இல்லாத நாட்டுக்கு போயிருக்கிறார்.

    ReplyDelete
  2. Why they could not arrest the baser al asad?

    ReplyDelete
  3. கைது உத்தரவை மீறி என்ன அமரிக்காவுக்கா போனார் இல்லை அந்த நீதி மன்றம் குருட்டு நீதிமன்றம் என்ற காரணத்தால் அதை அங்கிகரிக்காத நாட்டுக்கு போய்யுள்ளார்.கைது உத்தரவு இந்தோனேசியா போடவில்லையே.இந்தோனேசியாவுக்கும் சூடானுக்கும் மிக நெருங்கிய ராஜதந்திர உறவு உண்டு.அதனால் அந்த நீதிமன்றத்தை இந்தோனேசிய ஏற்றுக்கொண்டு இருந்தாலும் வேறு ஒரு சாட்டை சொல்லி அவரை கைது செய்யாமல் விட்டுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
  4. Subaideen shap,ஆங்கிலத்தில் எழுதியும் விடயம் விளங்காமல் எழுதியதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.