Header Ads



மருதானை பகுதி சண்டியர்களை போல, ரணில் செயற்படுகிறார் - டிலான் குற்றச்சாட்டு

எதிர் கட்சியிலே இருந்த தற்போதய அரசாங்கத்திற்கு தாம் ஆளும் கட்சி என்பது மறந்து போயுள்ளது, தற்போதைய எதிர்க் கட்சியோ தாம் ஆளும் கட்சி என்பதை மறக்காதுள்ளது இதனாலே கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டு வருவதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இன்று -30- கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தங்கள் நிலையறியாது பிரதமர் பாராளுமன்றில் உரையாற்றுகின்றார், முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தினார், மருதானை பகுதி சண்டியர்களை போல அவரது பதில்கள் வெளிப்பட்டு வருகின்றது.

இவர் ரணில் விக்ரமசிங்கவா?இல்லை ரணில் வீரவங்சவா? என என்ன வைப்பதை போல் அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிகாட்டினார்.

இதேவேளை, எதிர் கட்சியினர் தங்கள் நிலையரியாது உரிமைகளை கேட்கின்றனர் இது சாத்தியமானதல்ல என அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

நாட்டினுள் என்னதான் எதிர்ப்புகளை ஏற்படுத்தினாலும் நல்லாட்சியை அதன் காலம் முடியும் வரை அசைக்க முடியாதென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

மேலும், கட்சி தலைவர்களிடையேயான தனிப்பட்ட விரோதத்திற்குள் கட்சியை பிளவடைய இடமளியோம்.மஹிந்த மீது கொண்டுள்ள விரோதத்தினை அரசியல் மூலம் சந்திரிகா அம்மையார் வெளிப்படுத்துவதும், அதற்காக கருத்து வெளியிடுவதும் கட்சி சார்பில் பொருத்தமானது அல்ல அவைகள் காலாவதியான ஒன்றே.

இதேவேளை, மைத்திரி-மஹிந்த விரோதம் காரணமாக இன்னுமொறு பக்கமாக பிரச்சினைகள் வளர்ந்து செல்லும் நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்காலம் குறித்து சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானம் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கட்சி பிளவடையாது இருக்க பலமைவாய்ந்த கட்சியினை கொண்டு நடத்த வேண்டிய தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் இதற்காக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும், அதில் வெற்றியும் கண்டு வருவதாகவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இதிலே கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைகளை அனைவரும் பொறுப்பேற்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறியிருந்தார்.

அன்று அமைச்சர்களின் செயற்பாடுகளினால் கிடைத்த வெற்றிகளை தனது குடும்பத்துக்கானதென காட்டிக்கொண்டவர்கள், குறைகளையும் குடும்பத்துக்கானதாகவே கொள்ளவேண்டும். இல்லையேனில் பெற்ற யுத்த வெற்றியை அனைவருக்குமானதென அறிவிக்கவேண்டுமென அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.