Header Ads



புளிச்சாக்குளத்தில் றிசாத்


-எம்.கே.எம். சமீம்-

புளிச்சாக்குளம் பிரதேச அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பெயரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் அல்ஹாஜ் நவவி அவர்களினால், புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி அவர்களின் ஆலோசனையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினருக்கு வழங்கப்பட்ட காபட் வீதியில் 1.5 கி.மீ ஐ தாராக்குடிவில்லு பிரதான பாதைக்கு காபட் இடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், கைத்தொழில் வாணிப துறை அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் ரிஸாத் பதியுதீன் அவர்கள் 05.03.2016 அன்று அடிக்கல் நாட்டி வைத்தார். 

  இப்பிரதேசத்தின் விஜயத்தின் போது புளிச்சாக்கும் உமர் பாரூக் மகா வித்தியாலயத்திற்கும் விஜயம் செய்து  அதிபர் எம்.யு.எம் சரீக் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பாடசாலை இரண்டு மாடிக் கட்டடக் தேவையை செவிசாய்த்து கூடிய கெதியில் அதை பெற்றுத் தருவதாகவும் வாக்களித்துள்ளதுடன், அல்ஹாஜ் நவவி அவர்களின் 'நவவி பவுன்டேன்' முலமாக வழங்கப்பட்ட சான்றிதழ்களை விஷேட சித்திகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வழங்கிவைத்தார். மேலும் பாடசாலை தேவைகள் மாத்திரமின்றி மாணவர்களின் கல்வித் துரையிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்று உரையாற்றி அதன்காக குழு ஒன்றை அமைத்து செயற்படுமாறும் ஆலோசனை வழங்கினார்.

அதன் பின்னர் அமைச்சர் அவர்கள் புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக தலைவர் அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், ஊர்மக்களின் அழைப்பின் பெயரில் அமைச்சர் அவர்கள் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்குள்ள பெண்கள் தொழும் அறையை பார்வையிட்டு நவீன வசதிகளுடன் கூடிய பெண்கள் அறையை அமைக்க ஏற்பாடு செய்து கொடுக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களிடமும், மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி அவர்களிடமும் கூறியுள்ளார்கள். 

தொடர்ந்து தாராக்குடிவில்லுவில் அமைக்கப்பட்டுள்ள சீகிரி ரூபிங் சீட் தொழிற்சாலைக்கு சென்று அதனை பார்வையிட்டதுடன், தொழிற்சாலையின் உரிமையாளருடன் ஆலோசனைகள் செய்ததுடன், ஊழியர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இறுதியாக அக்கரவெளிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் இடத்திலுள்ள கரப்பந்தாட்ட மைதான வளாகத்திற்கு சுற்றுமதில் அமைக்க உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். 

இவ்வைபவர்களில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் உற்பட, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவவி, மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இல்யாஸ், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.டி. நிஜாம்தீன், சி.எம்.எம். சரீப், ராமநாயக, மற்றும் மதத்தலைவர்களும் பங்குபற்றினர். இவ்வைபவங்கள் அனைத்தும் புளிச்சாக்குளம் பிரதேச அபிவிருத்தி சங்க ஏற்பாபாட்டில் தலைவர் எஸ்.வை றியாஸ்தீன் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.



No comments

Powered by Blogger.