இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கென, தனி நிர்வாக அலகை ஏற்படுத்தவேண்டும் - டெலோ
இனப் பிரச்சினைத் தீர்வின்போது வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அதிகார பரவலாக்கலில் முஸ்லிம்களுக்கென தனியான நிர்வாக அலகொன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருகோணமலையில் கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற்ற டெலோவின் 9 ஆவது தேசிய மாநாட்டின்போதே இவ்வாறானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது டெலோ தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் திருகோணமலை நகரிலுள்ள தனியார் விடுதியொன்றில் இம் மாநாடு நடைபெற்றது இந்தத் தீர்மானங்கள் தொடர்பான அறிக்கையை கட்சியின் பிரதித் தலைவர் ஹென்றி மஹேந்திரன் மாநாட்டின் இரண்டாம் நாளன்று வெளியிட்டார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பாக வடக்கு -கிழக்கு இணைப்பையும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் வலியுறுத்துவதாக அமைகின்றது.
அந்தத் தீர்மானங்களில் வடக்கு- கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களை பெருன்பான்மையாக கொண்ட நிலத் தொடர்புடைய முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக சுயாதீன நிர்வாக அலகு ஏற்படுத்தப்பட வேண்டும்.
மலையகத்திலும் சுயாட்சி பிரதேசங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
Post a Comment