Header Ads



மின் தடையும், மர்ம நபர்களும்..!!

இலங்கையின் பல்வேறு நகரங்களில் இடம்பெறும் திடீர் மின் விநியோகத் தடையின் பின்னால் திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் இடம்பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.

தனியார் டீசல் மின் நிலையங்களில் அதிக விலைக்கு மின்சாரத்தை பெற்றும் கொள்ளும் நோக்கில், சூழ்ச்சியான முறையில் மின்விநியோக தடை இடம்பெறுவதாக பல தரப்பினரினால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மின் விநியோக தடை செய்யப்படாதென மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்த போதிலும் கொழும்பு நகரத்தில் பல இடங்கள் மற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மின் விநியோகத் தடை இரண்டு மணித்தியாளங்களில் இருந்து பல நிமிடங்கள் வரையிலான காலப்பகுதி வரை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தினசரி மின்சார பயன்பாடு 23000 மெகா வோட்ஸ் ஆகும். தினசரி நாட்டினுள் 3308 மெகா வோட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 900 மெகா வோட்ஸ் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தினால் தயாரிக்கப்படுகின்றது.

மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா மின் விநியோகத் தடை ஏற்படாதென ஊடகங்களில் அறிவித்த போதிலும், மின்சாரசபையின் சில குழுக்களினால் மின்சார தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர். ஒரு துறையைச் சேர்ந்த இரு தரப்பினரின் முரண்பட்ட கருத்துகளால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த அரசாங்கத்தின் போது தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் விற்பனை மற்றும் கொள்முதல் செய்வதன் ஊடாக மின்சார மாப்பியாக்கள் செயற்படுவதாகவும், மக்கள் பணம் கொள்ளைடிக்கப்படுவதாகவும் அப்போதைய காலப்பகுதியில் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த மாப்பியா குழுக்கள் செயற்படுவதாக மின்சாரசபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்..

இதேவேளை, நாட்டில் காணப்பட்ட வறட்சியான காலநிலை தற்போது நிறைவடைந்து மழை பெய்வதற்கு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இலங்கையில் தற்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள போதும் ஏன் இந்த திருட்டுக்கும்பலை பிடிக்க முடியவில்லை .

    ReplyDelete

Powered by Blogger.