ராஜிதவுக்கு சுகம் வேண்டியும், நல்லாட்சி அரசு நீடிக்க வேண்டியும் துஆப் பிரார்த்தனை.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
சுகவீனமுற்று தற்போது சிங்கப்பூர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுத் தேறிவரும் எமது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு சுகம் வேண்டியும், நல்லாட்சி அரசு நீடிக்க வேண்டியும் விசேட துவாப் பிரார்த்தனை நிகழ்வொன்று 12-03-2016 நிந்தவூர் ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் விரிவுரையாளர் ஏ.நசீர் அஹமட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமா ஏ.எம்.இப்றாகீம் மௌலவி அதிதியாகக் கலந்து கொண்டு, விசேட துஆப் பிரார்த்தனையை நடாத்தி வைத்தார். அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்ட போதெல்லாம் கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் முஸ்லிம் மக்களின் நியாயமான விடயங்களுக்கெல்லாம் சாதகமாக செயற்பட்டதோடு, இந்நாட்டில் பெரும்பாண்மை, சிறுபாண்மைச் சமூகங்கள் ஒற்றுமையாக வாழ வழி சமைத்தவர்களில் மிக முக்கியமானவர். எனவே, இவரைப் போன்ற நல்ல மனிதர்களின் சுகநலன்களுக்காகவும், நல்லாட்சி அரசை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க போன்றவர்களின் நல்லாட்சி நீடிக்கவும், அவர்களின் தேக சுகத்திற்காகவும் பிரார்த்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்'எனத் தெரிவித்தார்.
இப்பிரார்த்தனை நிகழ்வில் வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஒரு காபிருக்கு துஆ செய்வதாக இருந்தால், அவருக்கு ஹிதாயத் வேண்டி மட்டும் தான் பிரார்த்தனை செய்ய முடியும் என்று இஸ்லாம் கூறும் போது,இந்த மொளலவிமார் கூட்டம் என்ன பன்னுறாங்கள்..?
ReplyDelete