Header Ads



நோலிமிட் ஹாஜியாரின் நேர்காணலும், அதன் பிரதிபலிப்புக்களும்..!!

-ஒகொடபொல றினூஸா-

அண்மையில் நோலிமிட் உரிமையாளர் முபாறக் ஹாஜியார் அவர்களின் நேர்காணல் ஊடகங்களில் இடம்பெற்றதையடுத்து பல்வேறுபட்ட கருத்துக்கள் முகநூலில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அத்தகைய கருத்துக்கள் சரியா பிழையா என்பது குறித்த கருத்தாடலை ஊக்குவித்து விதண்டாவாதங்களை ஏற்படுத்தி (பல "மேதாவிகள்" செய்வதைப் போன்று) குட்டையைக் குழப்புவதல்ல எனது இந்தப் பதிவின் நோக்கம். மாறாக, குறித்த நேர்காணல் பற்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று 'இந்த நேர்காணல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம்' என்பது போன்ற நிலைத்தகவல்களும் பின்னூட்டங்களும். இவை மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் அற்பத்தனமான கருத்துக்கள் . இறைவன் எனக்கு வழங்கியுள்ள இருமொழிப் புலமையைக் கொண்டு இதனை மொழிமாற்றம் செய்தவள் என்ற அடிப்படையில் நான் சில தெளிவூட்டல்களை முன்வைக்கின்றேன்.

- எனது அறிவுக்குட்பட்டவரை சமூகத்தில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு கருத்தியல் ரீதியாகவோ வார்த்தைப் பிரயோக ரீதியாகவோ எந்தவித கருத்துக்களும் குறித்த நேர்காணலில் இடம்பெற்றிருக்கவில்லை.

- இந்த நாட்டின் இரண்டாவது சிறுபான்மை இனத்தைச் சார்ந்த சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து - அதுவும் சாதாரண தரத்தில் போதியளவு சித்திகளைப் பெறாத ஒருவர் - பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பாரிய கம்பனியின் தலைவராக முன்னேறியுள்ளார் என்றால் அவரின் உழைப்பின் பெறுமதியை சிங்கள மொழி தெரியாத மக்கள் முன் நான் கொண்டுசெல்ல முனைந்ததில் என்ன தவறுள்ளது?

- சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு தெம்பாகவும், சாதித்துவிட்டோம் என்பதற்காக இறைவனை மறந்து வாழும் பலரின் உள்ளங்களைக் குத்தும் ஓர் அம்பாகவும் இருக்கட்டுமே என்பதற்காகவே குறித்த நேர்காணலை நான் மொழிமாற்றம் செய்தேன். இப்படி அது 'இயக்கவெறி பிடித்தவர்களின்' வம்புக்குத் துணைபோகும் ஒரு கம்பாக மாறும் என கனவிலும் நினைக்கவில்லை. தேனை விடுத்து முள்ளை நுகரும் இத்தகைய 'மேதாவிகளை' எண்ணி உண்மையில் நான் பரிதாபப்படுகின்றேன்.

- (நோலிமிட் ஐ அழித்துக்கட்ட வேண்டும் என்ற சிந்தனை கொண்ட மிகச் சொற்பளவான பேரினவாதிகளும் உள்ள) சிங்கள சமூகத்தில், அவர்களின் தாய் மொழியில் பிரசுரமான இவரது நேர்காணல் அந்த சமூகத்தினுள் எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. மாறாக, அதனை வாசித்துப் பாராட்டிய புத்திஜீவித்துவ உள்ளங்களையே என்னால் சந்திக்க முடிந்தது. கேவலம் நமது சமூகத்தினுள் "இயக்கவெறியின்" வெளிப்பாடாய் அது விஷ்வரூபம் எடுத்து முகநூல் சுவர்களில் நாறிக்கொண்டிருக்கின்றது. போதாக்குறைக்கு பல மணித்தியாலங்களுக்கு மேல் செலவழித்து தமிழ் மொழி எனும் வாகனத்தில் அந்த நேர்காணலை ஏற்றிவிட்ட என்மீதும் விமர்சனக் கணைகள். நேர்மறை சிந்தனையோடு ஒரு விடயத்தை அணுகும் பக்குவம் பெற்றிராத "மேதாவிகளை" நோக்கி அந்தக் கணைகளை வீசுங்கள்.

- இறுதியாக, குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் உங்கள் குறுகிய மனப்பாங்கு பற்றி நன்கறிந்தவள் என்பதால் ஒன்றை மட்டும் கூறி முடித்துக்கொள்கின்றேன். சத்தியமாய் நான் எந்தவோர் இயக்கத்தையும் சேர்ந்தவளல்ல.

நன்றி.

சிங்கள மொழியிலுள்ள நல்ல விடயங்களை என்னால் இயன்றவரை தமிழில் தொடர்ந்தும் கொண்டுவருவேன். - இன்ஷா அல்லாஹ்

11 comments:

  1. innum ithuponra nerkanalkal konduvanthu sathikka thudikkum ilaya thalaimurayinarku ookamaliyunkal.

    ReplyDelete
  2. intha program video irukkutha?

    ReplyDelete
  3. We appreciate your good effort. Continue it dear sister. We need persons like you for our society.
    Don't bother about the barking dogs.

    ReplyDelete
  4. நேர்காணலின் தமிழ் மொழியாக்கம் முற்றாக வாசித்தேன். உங்கள் மொழிநடை நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.
    இயக்க வெறியர்களின் அறிவின் பரப்பெல்லையை கிணற்றுத் தவளையின் சிந்தனை வீச்சுக்குள் அடக்கிவிடலாம்.
    அதற்கு வானம் வட்ட வடிவம். உலகம் உருளை வடிவம்.

    ReplyDelete
  5. If you understand English , please read my comment . If
    religious organizations jumped at NOLIMT or you ,there's
    definitely a reason for the attack. The main reason is,
    Mubarak is involved with one of the organizations. Since
    all religious organizations are at each other's throat,
    it is natural to be a target of other organizations.
    And please also note that many people like late Naleem
    Haji rose to fame from nothing . And in the Sinhala
    community , late Nawaloka boss Dharmadasa rose to the
    top from zero and Tamil business tycoon Gnanam reached
    the top from zero . But remember that Mubarak is not
    from an ordinary family .He is an English speaking
    old Zahirian , a prestigious private Muslim school at
    his time.Not many good schools, universities or higher
    education interests in his time and specially in our
    community. So his , up to O/L study was more than
    enough at the time for self employment and minor
    career prospects . He worked hard and never cared for
    false social limitations. He was cleaning the Oberoi
    front wall when his class mates entered the hotel for
    partying .That was unbelievably a tough resistance to
    false pride . He deserves where he is today and I
    whole heartedly wish him more and more success, never
    mind his religious vision .

    ReplyDelete
  6. Ungal pani thodara Walthukkal
    Unmailaye moli matram seydadu nalladu
    Tamil pesum makkalum Padikka vendum Adan mulam payan pera vendum ena neithirukkirirhal adu parattathakkadu...

    ReplyDelete
  7. I appreciate very much for this interview and I learned a lot from this May Allah bless you.

    Muhajireen

    ReplyDelete
  8. I appreciate very much for this interview and I learned a lot from this May Allah bless you. 

    ReplyDelete
  9. நான் அதன் தமிழாக்கத்தை, முழுமையாக படித்தேன் அதில் நிறைய படிப்பினைகளும் நாம் கடந்த காலத்தில் விட்ட தவறுகள் தொழிலதிபர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் பொறுமை போன்றவை அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது சகோதரி இந்த பொறாமைக்காற நயவஞ்சகர்களின் தீயநச்சு கருத்து ஏவுகணைகளுக்கு உங்களின் பேனா முனையே எதிர்த்து போராடட்டும்,வாத்துகள்,

    ReplyDelete
  10. Good effort sis,
    May the almighty shower you more n more...

    ReplyDelete
  11. வாசகர்கள் ஒரு செய்தியை பல் வேறு நோக்கங்களுக்காக வாசிப்பார்கள். சிலர் பிழை பிடிப்பதற்கென்றே வாசிக்கிறார்கள. ஆதலால் கவலைப்படாமல், தயங்காமல் உங்கள் பணியைத் தொடருங்கள் சகோதரி. அப்பணி அல்லாஹ்வுக்குப பொறுத்தமாக இருக்கும் வரை வெற்றி உங்கள் பக்கம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.