Header Ads



மடவளையில் டாக்டர் ரயீஸின், விழிப்புணர்வு நிகழ்ச்சி


-HAFEEZ-

இன்றைய நவீன சமூகத்தில்  போதைப் பொருள் பாவனை, கையடக்கத் தொலைபேசிப் பாவணை, நவீன தொழில் நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக இளைஞர் யுவதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு நெறி தவறி, வாழ்வில் தோல்வியடைந்து, இக்கட்டான நிலைமைகளை அடைந்துள்ளமை பற்றி கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக விழிப்புணர்வேற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று (7.3.3016) மடவளையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மடவளை அபிவிருத்திச் சங்கம் (எம்.டி.எஸ்) மதீனா மத்திய கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில் இதனை காலை 10.00 மணிக்குஏற்பாடு செய்துள்ளது. விசேட வளவாளராக பிரபல சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணரும், இலண்டன் ஹார்லி ஸ்டீர்ட் வைத்திய சாலையின் வைத்திய அலோசகரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் வைத்தியத்துறைப் பேச்சாளருமான வைத்திய கலாநிதி  எம்.எல்.எம்.ரயீஸ் கலந்து கொள்வார்.

இன்று வளரும் மாணவ சமூகம் கல்வியில் கவனம் செலுத்தாது தவறான வழிகளில் செல்வதையும் அவர்களை சரியான பாதையில் நெறிப்படுத்தி சமூக மேம்பாட்டிற்கான ஒரு பரம்பரையாக உருவாக்கும் விடயத்திலும் அதிகமான பெற்றோர்கள் இன்று திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்பாரிய பிரச்சினையில் இருந்து சமூகத்தையும், சிறுவர்களையும் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் கடமையாகும். அவர்களை நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்;ளவர்களாக மாற்ற வேண்டும்.  அதற்கான ஒரு வழிமுறையாக இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எனவே வாயப்புள்ள சகலரும் இதில் கலந்து பயன் அடையுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டு கின்றனர்.

1 comment:

  1. This is the very important subject to be held at the moment to bring our childen to the proper way. And may Allah grant his rahmath to this oraganisation to continue their good deed.

    ReplyDelete

Powered by Blogger.