ஜேர்மனியில் மூடப்படும், தொழுகை கூடங்கள் - இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி
ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் பயன்படுத்தி வந்த தொழுகை கூடங்களை திடீரென மூடியதை தொடர்ந்து அந்நாட்டிலுள்ள இஸ்லாமிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Dortmund தொழில்நுட்ப பல்கலைக்கழகம், Essen-Duisburg மற்றும் University of Cologne ஆகிய 3 முக்கிய பல்கலைக்கழங்களில் பயன்பாட்டில் இருந்த இஸ்லாமிய தொழுகை கூடங்களை மூடியதால் தான் இந்த பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து Dortmund பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்லாமிய மாணவர்கள் தொழுகையில் ஈடுப்படும்போது ஆண்களுக்கு அதிக இடமும் பெண்களுக்கு குறைவான பகுதியும் ஒதுக்கும் சூழல் ஏற்படுவதால் ஆண்-பெண் பாகுபாடு ஏற்படுகிறது.
மேலும், சில பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தொழுகை கூடத்தை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Essen-Duisburg பல்கலைகழகத்தில் கடந்த 20 வருடங்களாக பயன்பாட்டில் இருந்த தொழுகை கூடம் தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், தொழுகை செய்ய பயன்படுத்தி வந்த அறையை தற்போது மாணவர்கள் படிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எங்கள் பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 130 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது மதம், கலாச்சாரத்தின் அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தி தருவது என்பது இயலாத காரியம் என தெரிவித்துள்ளனர்.
முக்கிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய தொழுகை கூடங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து தொழுகையில் ஈடுப்படுவதை தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாணவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
No worry.islam is easiest way.we can perform 5times prayers in any place.if they closed one place .can do any other place.by patient.islam is allowed to pray any place in the world exept toilet
ReplyDeleteThis is not a big issue
ReplyDelete