Header Ads



ஹிஸ்புல்லாவின் அனுதாபிகள் தண்டிக்கப்படுவார்கள் - சவூதி அரேபியா எச்சரிக்கை

லெபனானின் ஈரான் ஆதரவு ஷியா அமைப்பான ஹிஸ்புல்லா அனுதாபிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.

சவூதி உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 

சவூதி பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினர் நாட்டின் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு தண்டனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டினராயின் நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு உதவியாக போராடி வரும் ஹிஸ்புல்லாஹ்வை அரபு லீக் அமைப்பு தீவிரவாத குழுவாக கடந்த வெள்ளியன்று பிரகடனம் செய்தது.

இதன்மூலம் அரபு சுன்னி நாடுகளுக்கும் ஷியா தரப்பினருக்கும் இடையிலான மூறுகல் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சவூதி அஸாத் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.

ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் அரசில் செல்வாக்கு செலுத்துவதாக கூறி சவூதி மற்றும் ஏனைய வளைகுடா நாடுகள் லெபனானுடனான அரசியல் உறவுகளை கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. முஸ்லிம் நாடுகளை நாசம் செய்யும் அமேரிக்காவை தனது உற்ற நண்பனாக சவ்தி அரேபியா வைத்துள்ளது. பாளஸ்தீன் விடுதளைக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்கிரது இந்த மானங்கெட்ட சவ்தி.

    ReplyDelete

Powered by Blogger.