Header Ads



அகதிகளுக்கு ஆதரவான எனது பணியிலிருந்து, ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் - ஏஞ்சலா

ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு ஜேர்மனியில் புகலிடம் கோரி வரும் அகதிகளுக்கு தடைகளை மீறி ஆதரவு அளிப்பேன் என ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் நேற்று பங்கேற்றுள்ளார்.

அப்போது, ‘அதிக அளவில் அகதிகளை அனுமதிப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து உருவாகும் என கண்டனம் தெரிவிக்கின்றனர்.

ஆனால், நான் எடுத்துக்கொண்ட பணியில் இருந்து ஒருபோதும் பின் வாங்க மாட்டேன்.

ஜேர்மன் குடிமக்களில் சிலரும் அகதிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். நான் இவற்றை முற்றிலும் நிராகரிக்கிறேன்.

ஆஸ்திரியா மற்றும் பிற பால்கன் நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூடியது குறித்து சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

‘இது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். அகதிகளை நுழையவிடாமல் ஒரு நாடு எல்லைகளை மூடினால், மற்ற நாடுகளுக்கு தான் அதிகம் பாதிப்பு ஏற்படும்.

இதுபோன்ற ஒரு ஐரோப்பாவை நான் விரும்பவில்லை. இப்படி ஒரு ஐரோப்பா உருவாகவும் கூடாது.

எனவே, அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டினை ஒருபோதும் மாற்றுக்கொள்ள மாட்டேன் என சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் உறுப்பட தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.