Header Ads



"என்னை புத்தி சுயாதினம் அற்றவராக்க, மகிந்த முயற்சித்தார்"

எனது ஆட்சிகாலத்தின் பின்னர் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்பட்ட  நான், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் சிறுபான்மையினமான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர தன்மையுடைய  சர்வாதிகார செயற்பாடுகளை  சகித்து கொள்ள முடியாமையினாலும் எமது நாட்டை அழிவு பாதையில் இருந்து மீட்டெடுக்கவுமே நான் மீண்டும் அரசியலில் பிரவேசித்ததோடு நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கவும்  ஒத்துழைப்பு வழங்கினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மஹிந்தவின் ஆட்சிகாலத்தில் அவர்  உச்சக்கட்ட அதிகாரத்தினை பயன்படுத்தி என்னுடன் சார்ந்தவர்களை பல்வேறு அழுத்தங்களுக்கு உட்படுத்தியதோடு என்னை தனிமைப்படுத்துவதன் மூலம் புத்தி சுயாதினம் அற்றவாராக மாற்றவும் முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வானது கட்சியின் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.