Header Ads



ட்ரம்பை நான் கொலை செய்தால், உலகமே என்னை பாராட்டி நன்றிகூறும்"


’அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்டு ட்ரம்பை நான் கொலை செய்தால் உலகமே என்னை பாராட்டி நன்றி கூறும்’ என பேஸ்புக்கில் கருத்து கூறிய இஸ்லாமிய வாலிபர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எகிப்து நாட்டை சேர்ந்த Emadeldin Elsayed (23) என்ற வாலிபர் அமெரிக்காவில் குடியேறி தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘டொனால்டு ட்ரம்பை நான் கொலை செய்துவிட்டு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க தயார். ஆனால், என்னுடைய செயலுக்கு இந்த உலகமே எனக்கு நன்றி தெரிவிக்கும்’ என கருத்து வெளியிட்டுள்ளார்.

வாலிபரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து பொலிசாரின் கவனத்துக்கு சென்றதும் அவரை உடனடியாக கைது செய்தனர்.

எனினும், வாலிபர் மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாரு குடியமர்வு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வாலிபர் பேசியபோது, ‘நான் யாரையும் புண்படுத்த இவ்வாறு பேசவில்லை. ஆனால், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் டொனால்டு ட்ரம்பை கண்டிக்கவே இப்படி ஒரு கருத்து வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தான் செய்த தவறுக்காக அமெரிக்க நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு செய்துள்ளதாக அவர் அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளார்.

எதிர்வரும் யூலை 5ம் திகதிக்குள் வாலிபர் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால், குடியமர்வு அதிகாரிகளே அவரை பலவந்தமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. ithuthaan america win neethi. muzalawazu DONALD RUMBA I naattula irunthu weli anuppanum.sariyana nethi intha ulagathula kidaikkathu. insha allah marumaila thaan sariyana neethi kidaikkum

    ReplyDelete

Powered by Blogger.