Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர் அணிக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் இடையே ஒன்றுகூடல்

(ஹாசிப் யாஸீன்)

எதிர்வரும் 19ம் திகதி அம்பாறை மாவட்டத்தின் பாலமுனையில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டினை முன்னிட்டு மாநாட்டுக்கான இளைஞர் தொண்டர் அணியினருக்கும் கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்களுக்குமிடையிலான ஒன்றுகூடல் நாளை சனிக்கிழமை (12) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கட்சியின் தேசிய மாநாட்டுக்கான பிரதேச ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும், மாநாடு சம்பந்தமான விழிப்புணர்வையும், ஏற்பாடுகளையும், அதன் முக்கியத்துவத்தையும் அம்பாறை மாவட்டத்தின் மூளை முடுக்கெல்லாம் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மாவட்டத்திலுள்ள இளைஞர்களை கொண்டு இளைஞர் தொண்டர் அணி அன்றைய தினம் அமைக்கப்படவுள்ளதுடன் இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இளைஞர் தொண்டர் அணியினருக்கு மாநாடு சம்பந்தமாக கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீமினால் அறிவுறுத்தப்படவுள்ளதுடன் தொண்டர் அணியிருக்கான ரீ-சேர்ட், தொப்பி என்பன தலைவரினால் வழங்கி வைக்கப்படவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் இளைஞர் தொண்டர் அணியினருக்கும் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்குமிடையில் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம்பெறவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கட்சியின் மாநாட்டை முன்னிட்டு உருவாக்கப்படும் இந்த இளைஞர் தொண்டர் அணி தொடர்ச்சியாக கட்சியின் நடவடிக்கைகளோடு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இவர்கள் இயங்கவுள்ளதுடன் இத்தொண்டர் அணியிலுள்ள இளைஞர்களுக்கு கட்சியினால் வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளிநாட்டு உயர் கல்விக்கான சந்தர்ப்பங்களின் போது இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. இன்றைய அரசியல் சூழ்னிலையில் ( புதிய அரசியல் சாசனத் திருத்தம், தேர்தல் அமைப்பில் மாற்றம், அரசியல் அதிகார பகிர்வு, அபிவிருத்தி, தொழில் வாய்புகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் நிகழ நிறைய வாய்புகள் உள்ளன) மகாநாட்டுக்கு வருகின்ற ஜனாதிபதி, பிரதம மந்திரி, சம்பந்தன், மற்றும் அரசியல் வாதிகளும், பிரமுகர்களும், அதையும் தாண்டி இந்த உலகுக்கும், இலங்கை முஸ்லிம்களின் பலம், மக்கள் சக்தி, ஒற்றுமை கண்டு முஸ்லிம்களையும் முஸ்லிம் காங்கிரசையும் ( ஹக்கீமுடையதோ அல்லது வேறு தனிப்பட்ட நபரினதோ கட்சி அல்ல. இது முஸ்லிம்களின் கட்சி) புறம் தள்ள முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாகவே இந்த பேராளர் மகாநாட்டை பார்க்கிறோம். எனவே அனைத்து முஸ்லிம்களும் அரசியல் வேறுபாட்டையும், ஏமாற்றத்தையும், காழ்புணர்ச்சிகளையும் மறந்து இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு, முஸ்லிம்களின் முக்கியத்துவத்தையும், மக்கள் சக்தியையும் இந்த உலகத்துக்கே எடுத்து காட்டுவோம். அல்லாஹு அக்பர்.

    இந்த மகாநாடு முஸ்லிம்களின் நட்பன்பையும், ஏனையவர்களை மதிக்கும் தன்மையையும், அமைதியையும் எடுத்தியம்பும் என நம்புகிறோம். முஸ்லிம் இளைஞர்கள் முன்னின்று நடத்தி வைப்பார்கள் என நம்பிகிறோம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இன்றைய அரசியல் சூழ்னிலையில் ( புதிய அரசியல் சாசனத் திருத்தம், தேர்தல் அமைப்பில் மாற்றம், அரசியல் அதிகார பகிர்வு, அபிவிருத்தி, தொழில் வாய்புகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் நிகழ நிறைய வாய்புகள் உள்ளன) மகாநாட்டுக்கு வருகின்ற ஜனாதிபதி, பிரதம மந்திரி, சம்பந்தன், மற்றும் அரசியல் வாதிகளும், பிரமுகர்களும், அதையும் தாண்டி இந்த உலகுக்கும், இலங்கை முஸ்லிம்களின் பலம், மக்கள் சக்தி, ஒற்றுமை கண்டு முஸ்லிம்களையும் முஸ்லிம் காங்கிரசையும் ( ஹக்கீமுடையதோ அல்லது வேறு தனிப்பட்ட நபரினதோ கட்சி அல்ல. இது முஸ்லிம்களின் கட்சி) புறம் தள்ள முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாகவே இந்த பேராளர் மகாநாட்டை பார்க்கிறோம். எனவே அனைத்து முஸ்லிம்களும் அரசியல் வேறுபாட்டையும், ஏமாற்றத்தையும், காழ்புணர்ச்சிகளையும் மறந்து இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு, முஸ்லிம்களின் முக்கியத்துவத்தையும், மக்கள் சக்தியையும் இந்த உலகத்துக்கே எடுத்து காட்டுவோம். அல்லாஹு அக்பர்.

    இந்த மகாநாடு முஸ்லிம்களின் நட்பன்பையும், ஏனையவர்களை மதிக்கும் தன்மையையும், அமைதியையும் எடுத்தியம்பும் என நம்புகிறோம். முஸ்லிம் இளைஞர்கள் முன்னின்று நடத்தி வைப்பார்கள் என நம்பிகிறோம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. last paragraph I see it as dicremaination statement and it will question me are these people vote to serve for selected group of people???

    ReplyDelete
  4. @Muslim Way! That's how the politicians are! Rather than serving the country they will only serve selected people and themselves.
    Had there any politician or political party genuinely serving the country and its people we wouldn't have seen any power change. Everyone would vote the same party.

    ReplyDelete
  5. இதுவும் ஒரு செய்தி என்று இங்கு வெளியிடுகிறீர்களே! இந்தக்குப்பைகளை இங்கு கொட்டவேண்டாம்! சமூகத்துக்கு பிரயோசனமான, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுங்கள்!

    ReplyDelete

Powered by Blogger.