டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானால் நாகரிகங்கள் இடையே மோதல் ஏற்படும்: துபாய் கவலை
அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார். வெளிநாட்டவர்களுக்கு எதிராகவு தொடர்ந்து பேசி வருகிறார்.
டொனால்ட் டிரம்ப் பேச்சு தொடந்து எதிர்ப்பு எழுந்தாலும், அவருக்கான ஆதரவும் அதிகரித்தப்படியே உள்ளது. இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானால் மக்களிடையே மோதல் ஏற்படும் என்று துபாய் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து துபாய் போலீஸ் தலைவர் தாஹி ஹாலபான் தமீம் “ஒருவேளை ஹிலாரி கிளிண்டனை டொனால்ட் டிரம்ப் தோற்கடித்து அமெரிக்க அதிபரானால் சமூவேலின் கருதுகோளான ’நாகரிகங்களின் (இனக்குழுக்கள்) இடையிலான மோதல்’ ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஹதிஸ்களின் அடிப்படையில்... முட்டாள்களும், அரக்கர்களும், கொள்ளையர்களும் ஆட்சிசெய்வது கடைசிகாலத்தின் வெளிப்பாடுதானோ?
ReplyDelete