Header Ads



"இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், நாட்டுக்கு என்ன நடக்குமோ தெரியாது"

அரசாங்கம் நிர்வாகத்தை சரியாக செய்யாது, பழிவாங்கலை மாத்திரம் சரியாக செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அப்புத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது அபிவிருத்தியை காணமுடியவில்லை, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை தாறுமாறாக மீறி வருகிறது என கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த அரசு நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்வதாக கூறியே ஆட்சிக்கு வந்தனர். ஆனால் வேகமாக பழிவாங்கி வருகின்றனர், இதை மட்டும் நன்றாக செய்கின்றனர் என மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மக்கள் கஷ்டத்தில் விழுந்துள்ளனர், சாப்பிட முடியாதுள்ளனர், இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் நாட்டுக்கு என்ன நடக்குமோ தெரியாது, என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

4 comments:

  1. If you don't know what going to happen stay at home.

    ReplyDelete
  2. ஆனால், அனீனீதிக்கெதிரான நீதி நிலை நாட்டலும் வேகமே இல்லாமல் இடம்பெறுகின்றது

    ReplyDelete
  3. Hello Former President, You and your stuffs are outdated. Try to say something differently.

    ReplyDelete
  4. நீ சத்தமில்லாமல் இருந்தால் நாடு செழிப்படையும்

    ReplyDelete

Powered by Blogger.