புதிய அரசியல் கட்சி தற்போதைக்கு இல்லை - பஷில்,
புதிய அரசியல் கட்சி தற்போதைக்கு அமைக்கப்படமாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனித்தனியாக இயங்கி வரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பொதுவான ஓர் எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதே எதிர்க்கட்சிகளின் தலைவர்களது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியான ஒர் எதிர்க்கட்சியை அமைப்பதனை விடவும், ஒரே பாதையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பயணிக்க செய்வதே நோக்கமாகும் எனவும் புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கு முன்னதாக மேலும் பல்வேறு கருமங்களை ஆற்ற வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவான எதிர்க்கட்சியொன்றை அமைக்கும் பணியில் தமது பங்களிப்பு மிகவும் சொற்பளவிலானது என பஷில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
2
எவரது விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்வதற்காகவும் தாம் அரசியல் செய்யப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைகளுக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே தாம் அரசியலில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக தாம் செல்லும் இடமெல்லாம் மக்கள் தம்மை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தம்மைச் சுற்றி இணைந்து கொள்ளும் தரப்பினர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தாம் கைவிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசியல் வாழ்க்கை பற்றி பல்வேறு தரப்பினர் வெவ்வேறு பிரச்சாரம் செய்து வருகின்ற போதிலும் அவற்றைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
No more separate political party, which means no more arrest of Namal on Tajudeen's case,
ReplyDeleteஉங்கள் கூட்டு எதிரணியின் குடுமி யார் பிடியில் இருக்கிறது இப்பொழுதாவது விளங்கியிருக்குமே.
ReplyDeleteகுடுமியை பிடி கொடுத்து விட்டு சும்மா பீத்தக் கூடாது.