Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில், பங்கேற்றவரின் நேரடி அனுபவம்

(சுலைமான் றாபி)

பாலமுனையில் கடந்த 19ம் திகதி பல இலட்சம் ரூபா செலவு செய்து நடாத்தி முடிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கோ அல்லது அவர்களின் நிலையான இருப்பிற்கோ எந்த வித உத்தரவாதங்களும் வழங்காமலும் அவர்கள் பற்றி எந்தவிதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமலும் கட்சியின் தலமைத்துவதிற்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை மட்டும் புடம் போட்டுக் காட்டும் மேடைத்தளமாகவும், அதிதிகளாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித்தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளுக்கும், வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும்  சோக்காட்டும் ஒரு விழாவாகவுமே இது அரங்கேற்றப்பட்டது.

இலங்கை முஸ்லீம்களின் உரிமைகளைப் பற்றி பேசும் கட்சிகளில் முதல்பங்கு வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவருக்கான ஒரு தனி மாநாடாகவே அது நடாத்திக் காட்டியிருக்கிறது எனலாம். ஆனால் ஒரு தேசிய மாநாடு என்று வரும் போது அந்த கட்சியின் கொள்கைகள், தீர்மானங்கள் முதலியன உள்ளிட்ட அனைத்து விடயங்களும் இம்மாநாட்டின் மூலம் பிரகடனமாக வெளியிடப்பட்டிருக்க  வேண்டும். ஆனால் ஒன்றுமே இடம்பெறவில்லை.

மாநாட்டிற்கு கட்சியின் முதுசங்கள் சில மிகுந்த எதிர்பார்ப்புடன் மேடையேறி இருந்த போதும் கட்சியின் பழைய, புதிய போராளிகளுக்கு அதன் வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாமல் போனதும், அதன் வரலாறுகள் மறக்கடிக்கப்பட்டதுமான நிலையினை தோற்றுவித்திருந்தது. உண்மையில் இந்த மாநாட்டில் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த கட்சியின் போராளிகள் இந்த கட்சியின் மீது வைத்துள்ள மிகப் பெரும் நம்பிக்கைகள், இதன் வீர வரலாறுகள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படவேண்டிய பொன்னான தருணத்தினை மண்ணாக்கியதான ஒரு நிலைப்பாடையே தோற்றுவித்திருந்தது.

கட்சி பற்றியும் அதன் மறைந்த தலைவர் பற்றியும் நிறையவே பேச வேண்டும் என்று வந்தவர்களும் இறுதியில் அவர்களின் சிந்தனைகளை சிதறடிக்கும் செயற்பாடுகளும் நடந்தேறியது. முஸ்லிம் காங்கிரசின் வரலாறு தெரிந்தவர்களில் சட்டத்தரணி அப்துல் கபூர், மு.கா செயலாளர் ஹசன் அலி மற்றும் கல்முனை மாநகரசபையின் பிரதி மேயர் முழக்கம் மஜீத் ஆகியோர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களில் ஒருவரிற்கேனும் சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தது மு.கா போராளிகள் மத்தியில் கவலையை தோற்றுவித்தது.

புதிய செயலாளர் யார்?
இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலியின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதன் பிறகு புதிய அதிகாரமிக்க  செயலாளராக நியமிக்கப்பட்ட உச்சபீட செயலாளர் யார் என்பதும், கட்சியின் புதிய நிர்வாகிகள் யார் என்பதும் போராளிகளிடத்தில் அறிமுகம் செய்யாமல் போனது மு.கா தலைவரின் இன்னொரு தனியாழுகையாகும். எனவே இங்கு கட்சியின் புதிய உச்ச பீட செயலாளர் இனிவரும் காலங்களில் தலையாட்டி பொம்மையாக செயற்படப் போவதற்கான சகுனமே அரங்கேறியது. 

இடமின்றி தவித்த மாகாண சபை உறுப்பினர்கள்.
இம்மாநாட்டின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வருகைக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரசின் சில மாகாண சபை உறுப்பினர்கள் இருப்பதற்கு இடமின்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர். இறுதியில் மதகுருமார்களுக் கென்று ஒதுக்கப்பட்ட மேடையில் ஒரு மாகாண சபை உறுப்பினரும், பிரதான மேடைக்கு வலது புறமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில் இன்னொரு மாகாண சபை உறுப்பினரும் அமர்ந்திருந்ததோடு அவர்களும் மக்களின் பிரதிநிகள் என்ற வகையில் அவர்களைப் பற்றியும் கட்சி கணக்கெடுக்காமல் விட்டது இங்கு சுட்டிக் காட்டப்படவேண்டியதாகும்.

மனக்கவலையான விடயம்.
மாநாடு நடைபெற்ற தினத்தில் ஆதிவாசிகள் மற்றும் சினிமாப் பாடல்களின் நாடகத்தளமாகக் காணப்பட்ட தேசிய மாநாட்டு மேடையில் இஸ்லாமியர்களினதோ அல்லது முஸ்லீம்களினதோ பாரம்பரியத்தினையோ அவர்களின் கலாச்சாரத்தினையோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் அரங்கேற்றப்படாமலும், அதற்கு வழிசமைக்காமல் விட்டதுதான் கவலையான விடயமாக காணப்பட்டது.  ஏனென்றால் ஆதிவாசிகளை அழைத்து வந்து நாடகத்தினை அரங்கேற்ற முடியுமென்றால் முஸ்லிம் கட்சியின் மாநாட்டில் முஸ்லீம்களின் கலாச்சார நிகழ்வுகளை அரங்கேற்றாமல் விட்டது அவர்களைப் பற்றி சிந்திப்பதாக கூறும் தலைமை நடத்தும் நாடகமாக மக்களினால் ஆருடம் கூறப்படுகின்றது. 

ஆதிவாசிகளின் நடனத்திற்கு காசு கொடுத்த ஹக்கீம்.
அம்பாறை மாவட்டத்தில் தம்பானை வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் மாநாடு நடைபெற்ற தினத்தில் அவர்களின் விஷேட நாட்டியம் ஒன்று அரங்கேற்றப்பட்ட போது இறுதியில் அவர்களுக்கு தனது Shirt பைக்குள் இருந்து 5,000 ரூபா காசினை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கு கொடுத்து அவர்கள் மூலமாக ஆதிவாசிகளுக்கு அன்பளிப்பு வழங்கினார். இதனைக்கண்ட முன்வரிசையில் இருந்த கட்சியின் முக்கிய அரசியல் வாதிகள் எல்லோரும் தங்கள் பைகளுக்குள் இருந்த காசுகளை அவர்களுக்கு அள்ளிவழங்கினர்.

சந்தர்ப்பத்தை தவறவிட்ட ஹக்கீம்.
இந்நாட்டில் முப்பெரும் தலைவர்களான ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித்தலைவர் ஆகியோர்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்த மேடையில் விரும்பியதெல்லாம் கேட்கக்கூடிய சிறந்த சந்தர்ப்பம் இருந்தும், அதனை மு.கா தலைவர் எப்படியாவது கேட்டுப் பெற்றுக் கொள்வார் என்ற நட்பாசை போராளிகளிடத்தில் இருந்தாலும் அவைகளை எழேடுத்தும் பாக்காமல் வீர வசனங்களை மட்டும் மேடையில் முழங்கினார். இருந்த போதும் முப்பெரும் தலைவர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் முஸ்லிம் தேசியவாதம், தனியலகுக் கோரிக்கை, காணிப்பிரச்சினை, தமிழ் பேசும் அரசாங்க அதிபர், கரையோர மாவட்டம், சாய்ந்தமருது பிரதேச சபை, ஒலுவில் மக்களின் காணி சுவீகரிப்பிற்ற்கான நஷ்டஈடு போன்ற முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் வெளிக்கொணரப்படாமல் தான் திரட்டிய மக்கள் படையே அதிதிகளிடம் காட்டினார். 

ஊடகவியலாளர்களிடம் பொய் சொன்ன ஹக்கீம்
முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு சம்பந்தமாக கடந்த 12ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இம்மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் குறிப்பாக முஸ்லிம் தேசியம் சம்பந்தமாக விஷேட கொள்கைப் பிரகடனம் இம்மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த மாநாட்டில் இவைகள் ஒன்றுமே நடந்தேறவில்லை.

திட்டித்தீர்க்கும் மேடைத்தளம்.
இறுதியில் மாநாடு நடைபெற்று 2ம் கட்ட உரையை நிகழ்த்திய கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனக்கும், தனது கட்சிக்கும் சமகாலத்தில் துறோகம் இழைத்தவர்களுக்கு எச்சரிக்கை தொனியில் அமைந்த குரலுடன் உரையாற்றியதோடு, மேடையில் அமர்ந்திருந்த ஏனைய கட்சி அங்கத்தவர்களின் வாயையும் அடைத்தார். ஆனால் இந்த இரண்டாவது உரையிலும் முஸ்லிம் மக்கள் பற்றியோ, அவர்களின் உரிமைகள் பற்றியோ எதுவும் பேசாமல் குறிப்பாக கட்சியின் இரண்டு முக்கிய உறுப்பினர்களை திட்டித்தீர்ற்கும் மேடைத்தளமாக பாவித்தார்.

இறுதியாக இம்மாநாடு சொன்ன சேதி என்ன..?
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது தேசிய மாநாடு அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமின் தனியாழுகையை வெளிக்காட்டும் மாநாடாகவும், வருகை தந்த ஜனாதிபதி, பிரதம மந்திரி, எதிர்கட்சித்தலைவர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மாத்திரம் காட்டப்பட்ட "ஒரு ஷோவாகவும்" இது மாறியிருக்கின்றது. ஏனென்றால் முழுக்க முழுக்க இம்மாநாட்டில் தலைவரின் தனியாழுகையை பறைசாற்றும் ஒரு மேடைத்தளமாக காட்டபட்டதோடு தனது தனியாழுகைக்காக திரட்டப்பட்ட மக்கள் மத்தியில் நானே ராஜா நானே மந்திரி எனும் நிலையினை தெளிவாக பறைசாற்றியுள்ளது. ஆனால் மறுபுறம் இந்த மாநாடிற்கு வருகை தந்தோரில் அதிகமான போராளிகள்  "ஷா! சனம்டா கடும் சனம்" என்றே முழக்கம் வந்ததுதான் மீதம். மாறாக இந்த மாநாட்டில் ஒன்றுமே உருப்படியாக நிறைவேற்றப்படாமல் இலட்சக்கணக்கில் செலவு செய்து கூடிக்கலைந்த மாநாடாகவும் கலந்து கொண்ட மக்களைத்தவிர ஒன்றுமே தீர்வில்லாத மாநாடாக்கவுமே  அமைந்தது.

எனவே இனிவரும் காலங்களில் நடாத்தப்படும் மாநாடுகளாவது முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அடிப்படைத்தளமாகவும், அதன் மூலம் சர்வதேசத்தின் பார்வை முஸ்லிம் மக்கள் மீதும் திரும்புவதற்கான பாலமாகவும் அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

6 comments:

  1. அதாவுல்லா பாட்டு பாடி குத்தாட்டம் போட்டால் அதில் எந்த தவறும் இல்லை ஹக்கீம் செய்தால் அது மார்கத்திற்கு புறம்பானது, என்று கத்துவது, பச்சையாக தங்களுக்கு பின்னால் திரியும் அதா ஒரு முஸ்லிமா என்பது பெரிய கேள்வி இங்கு.

    நான் இங்கு இருப்பவர்களுள் ஹக்கீம் சிறந்தவர் நீங்கள் அவரை விட ஒரு சிறந்தவரை சுட்டி காட்டுங்கள் அடுத்த விடயத்தை யோசிப்பம்,

    பூனை இடம் உள்ள koliyai பறித்து நரியிடம் கொடுக்க சொல்லு ஹிந்ரீர்கள

    சும்மா சமுக பட்டு என்று பீதாம நடுளிமையோடு பேசுங்கள்

    ReplyDelete
  2. Hon Rauf Hakeem has expressed in his speech about the present Muslim world issue and its impact on Sri Lankan Muslim via English.And also he said, the SLMC will not allow terrorism and it is not a extremist party. And he said about many expectations of Muslim community in Sinhala. Finally he said, the ethnical issues must be solve with Muslim community participation in Tamil in the conference

    ReplyDelete
  3. சுலைமான் ராபி...

    நேபோஷ் போன்ற "போராளிகள்" இருக்கும் வரை! ஹகீம் போன்ற தளபதிகளுக்கு கொண்டாட்டம்தான்!

    அதுசரி.... எது அந்த "போராட்ட களம்"? எனக்கு இன்னும்தான் புரியலையே! (ஒருவேளை காங்கிரசின் "அடுக்களை"யாக இருக்குமோ?
    அப்படித்தானே அடிக்கடி நடக்குது!

    ReplyDelete
  4. Sulaiman raafi wich party

    ReplyDelete
  5. what Sulaiman Rafi Said, it is 100% true. Mr.Rauf Hakeem should take care of this matter

    ReplyDelete
  6. what Sulaiman Rafi Said, it is 100% true. Mr.Rauf Hakeem should take care of this matter

    ReplyDelete

Powered by Blogger.