மடவளை பஸார் - அல்முனவ்வரா ஆரம்பப் பாடசாலையின், இல்ல விளையாட்டுப் போட்டி
(JM.HAFEEZ)
உலகில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனும் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக வாழப்பழக வேண்டும். ஒவ்வொரு பெரிய முஸ்லிம் கிராமமும் சிறிய முஸ்லிம் கிராமங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என மத்திய மாகாண சபை அங்கத்தவர் எம்.ரி.எம்.முத்தலிப் தெரிவித்தார்.
மடவளை பஸார் அல்முனவ்வரா ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் (12.3.2016) அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது,
இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையிலே எண்ணிலடங்கா அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றை முறையாகக் கையாள்வதிலேதான் அதன் பிரதிபலன்கள் தங்கியுள்ளன. இறைவன் ஒருவருக்கு பொதுச் சேவை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பான். இன்னொருவருக்கு தனது குடும்பத்தை பராமரிக்கும் பாக்கியத்தைக் கொடுத்திருப்பான், மற்றொருவருக்கு கூடுதலான பணத்தைக் கொடுத்து அதன் மூலம் நன்மைகளைச் செய்ய சந்தர்ப்பம் வழங்கி இருப்பான். இன்னொருவனை ஏழையாகப் படைத்து அவன் மூலம் வசதியுள்ளவர்கள் நன்மை செய்யும் சந்தர்ப்த்தை ஏழையின் கையில் கொடுத்திருப்பான். இப்படி ஒவ்வாருவருக்கும் ஒவ்வொரு தன்மைகளை வழங்கி உலகை இயக்கும் இறைவன் அவை அனைத்தையும் இறுதியாக அவனது அருற்கொடையாகவே வைத்துள்ளான். அதனை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.
எமது கடமையை நாம் சரிவரசந் செய்யாத போது அதனை இறைவன் பறித்துக்கொள்வான். இதனை அண்மைகால விடயங்கள் எமக்கு நன்கு உணர்த்தியுள்ளன. அதேநேரம் நாம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை (அமானித்ததை) சரியாக நிறைவேற்றும் போது எம்மை உயர்த்துவான். மாறாக நடந்து கொண்டால் எம்மை தாழ்த்துவான். இதுதான் நியதியாகும்.
என்னைப் பொருத்தவரை நாம் தொடாந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். மாகாண சபைகள் அமைக்கப்பட்ட காலம் முதல் மத்தியமாகாண சபையில் எமது குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் அங்கத்தவராக இருந்துகொண்டே உள்ளனர். அதற்கேற்ற ஏனைய பின்னணிகளையும் இறைவன் எமக்குத் தந்துள்ளான். அதனை நாம் கையாளும் முறையிலே எமது வெற்றியும் தோல்வியும் அமைந்துள்ளது. பாருக் ஹாஜி, அமீன் ஹாஜி, றவூப் ஹாஜி அடுத்து முத்தாலிப் ஹாஜி என்று எமக்கு இறைவன் அரசியல் ரீதியாக ஒரு பொறுப்பை (அமானிதத்தை) ஒப்படைத்துள்ளான்.
எனவே மத்திய மாகாண சபையில் அங்கத்தவர்களாக உள்ள இங்கு சமுகமளித்துள்ள லாபிர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார் மற்றும் நானும் இணைந்து முதலமைச்சரின் உதவியுடன் ஒரு திட்டத்தை அமுல் படுத்த உள்ளோம். கண்டி மாவட்டத்திலுள்ள 70 முஸ்லிம் பாடசாலைகளின் தகவல்களைத் திரட்டி வருகிறோம். ஏறத்தாழ 40 பாடசாலைகளில் திரட்டி விட்டோம். பாடசாலைகளுக்க நேரடியாகச் சென்று விசேடமாக பௌதீகக் குறைபாடுகளை அறிந்து முதலமைச்சரின் வழிகாட்டலில் அவற்றை பெற்றுத் தர உள்ளோம். அந்த அடிப்படையில் அல் முனவ்வரா பாடசாலைக்கும் விஜயம் செய்து தகவல் திரட்டி அவசியமெனக் கருதும் விடயங்களை நிறைவேற்ற திட்டமிட்டள்ளோம்.
உலகில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனும் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக வாழப்பழக வேண்டும். ஒவ்வொரு சிறிய கிராமங்களும் பெரி கிராமங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். கண்டி மாவட்டத்தைப் பொருத்தவரை மடவளையும், அக்குறணையும் இரண்டு பெரிய கிராமங்களாகும். இவை இரண்டும் ஏனைய சிறு கிராமங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும். இதுவும் இக்கிராமத்திற்குள்ள ஒரு அமானிதமாகும்.
அதேநேரம் மாணவர்கள் ஒரு பாடசாலையின் சொத்து. அப்பாடசாலை ஒரு கிராமத்தின் சொத்து. எனவே மாணவர்களைப் பாதுகாபப்தன் மூலமே இக்கிராமத்தையும் சமூகத்தையும் பாதுகாகக் முடியும் என்றார்.
இவ்வைபவத்தில் உரையாற்றிய மத்திய மாகாண சபை அங்கத்தவரான ஹிதாயத் சத்தார் தெரிவித்ததாவது-
ஒருகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் தமது தந்தையர்களின் வியாபாரத்தையும் கொடுக்கள் வாங்கள் களையும் மட்டும் கொண்டு நடத்தவதற்காகவே கல்வி கற்றனர். ஆனால் இன்று சற்று மாறுதல் ஏற்பட்டு குறிப்பிட்ட கல்வி நோக்கை இலக்காகக் கொண்டு கற்கின்றனர். ஆனால் ஒரு பாடசாலையின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் . அந்த அடிப்படையில் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை முன்னர் மதீனா தேசிய கல்லூரியின் ஒரு அங்கமாக இருந்து பின்னர் பிரிந்ததாகும். இருப்பினும் குறுகியகாலத்தில் என்பதை விட முதல் வருடமே ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களில் ஒருவர் உள்ளடங்கி இருந்தார். இது போன்ற பல விடயங்களை இப்பாடசாலையில் வளர்ச்சியில் காணமுடிகிறது. அது பெற்றோர் பழையமாணவர்களது கூட்டு முயற்சியின் பெறுபேறு என்றே சொல்ல வேண்டும். கல்வியின் விடியலுக்காக ஒரு கிராமத்திலுள்ள சகல மக்களும் பாடபடவேண்டும் என்றும் அவர் கூறினார்.
மத்திய மாகாண சபை அங்கத்தவர் செய்னுள் ஆப்தின் லாபிர் தெரிவித்ததாவது-
மாணவர்களது திறமைகளை பெற்றோர் பாராட்ட வேண்டும். அதில் ஒரு வழி முறைதான் நேரடியாக அவர்களது விடயங்களில் தாமும் பங்குகொள்வது. அந்த வகையில் இன்று இந்த விளையாட்டுப் போட்டிக்கு நிறையப் பெற்றோர்கள் வந்துள்ளனர். இது பெற்றோரிடமுள்ள கல்வியின் விழிப்பைக் காட்டகிறது.
ஒரு மாணவன் பல்கலைக்கழகம் சென்று உயர் கல்வி கற்பதற்கான அடித்தளத்தை இடுவது ஆரம்பப் பாடசாலைகளேயாகும். ஆகவே ஆரம்பக் கல்வி மிக முக்கிய மானதாகும். ஆந்த அடிப்படையில் ஆரம்பக் கல்வியி முதல் பெற்றோர் தொடாந்தும் விழப்பாக இருப்துடன் மாணவர்களது திறமைகளை நேரடியாக பாராட்டவேண்டும். அவற்றைக் கண்டு களிக்க இவ்வாறு சமூகமளிக்க வேண்டும் என்றார்.
Post a Comment