Header Ads



இந்தியாவில் காட்டப்படும் அன்பு அளப்பரியது - அப்ரிடி, அப்ரிடியின் பேச்சு வெட்கக்கேடானது - மியான்டட்


ஆறாவது 20 ஓவர் உலகக் கிண்ண போட்டிகளுக்காக இந்தியா வந்துள்ள அப்ரிடி, பாகிஸ்தானை விட இந்தியர்களின் அன்பு அளப்பரியது என்றுள்ளார்.

ஆறாவது 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிகளின் லீக் ஆட்டங்கள் வரும் 15- ஆம் திகதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் அணி இந்தியா வருவதை தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில், இந்திய உள்துறை அமைச்சகம் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பாகிஸ்தான் அணி கொல்கத்தா வந்து சேர்ந்துள்ளது.

அப்போது பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் சாகித அப்ரிடி, இந்தியாவில் விளையாடுவது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தார்.

கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலத்தில் இருப்பதால், இந்தியாவில் தமக்கு கிடைக்கும் அன்பை வாழ்நாள் முழுமைக்கும் நினைவு கூர்வேன் என்றார்.

மேலும், பாகிஸ்தானை விட இந்தியாவில் தங்கள் மீது காட்டப்படும் அன்பு அளப்பரியது எனவும் தெரிவித்துள்ளார்.

2

பாகிஸ்தானை விட இந்தியாவில் சுதந்திரமாக உணர்வதாகவும், இந்திய மக்களின் அன்பு அளப்பரியது என்றும் அப்ரிடி தெரிவித்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவிட் மியான்டட் அப்ரிடியின் பேச்சு வெட்கக் கேடானது என்று குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Yes he insulted his own country and it's people.Recently one of Pakistani actress called him a crazy man.Once he said "Indians will not have heart as Pakistanis do"So his these contradictory statement and his approach in cricket field,going for big crazy shot even when match is poised on their way grabbing the defeat from the jaws of victory shows his immaturity.
    India other hand bullying other countries in every field, it refused to honor the bilateral agreement of playing cricket with Pakistan,not allowing to play Pakistanis in IPL, share the big portion of cricket money in the name of big three and Also did not honour the bilateral economic agreement with srilanka shows it's true nature. so these men Afridi and Shohaib Malik statement is not worth.So what Miandad says is correct.

    ReplyDelete
  2. தாம் உணர்வதை அப்படியே (வெளிப்படையாகக்) கூறுபவர்களுக்கு இவ்வாறான எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜமானதுதான்.

    பாகிஸ்தான் ஆனாலென்ன இந்தியாவானாலென்ன வெற்றியின்போது அணியையும் வீரர்களையும் உயர்த்திப் பிடிப்பவர்கள் -மிகையான அன்பு காண்பிப்பவர்கள்- தங்கள் சொந்த அணி தடுமாறுகின்றபோது அல்லது தோல்வியுறும்போது அவமானப்படுத்துவார்கள். இதுதான் அவர்களது 'அன்பு'.

    வெற்றியின்போதும் தோல்வியின்போதும் குடும்பம்போல அணியுடன் நிற்கும் குணத்தை இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் இலங்கை ரசிகர்களிடம் பாடம் கற்கவேண்டும்!

    ReplyDelete
  3. Today's match would have shut his critics mouth.

    ReplyDelete

Powered by Blogger.