"அவசரப்படக்கூடாது" (வீடியோ)
"காட் டேலண்ட்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்விட்சர்லாந்தில் பிரபலம். இதில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ஓவியம் ஒன்றை வரையத் தொடங்கினார். சில நொடிகளில், அவருடைய ஓவியம் மிகவும் குழந்தைத்தனமாகத் தெரியவர, நடுவர்கள் ஒருவர் பின் ஒருவராக "ரிஜெக்டட்" பட்டனை அழுத்தினர்.
நான்கு நடுவர்களும் ரிஜெக்டட் பட்டனை அழுத்திய பிறகும் மிக வேகமாக ஓவியத்தை வரைந்து முடித்து, அதனை தலைகீழாக்கி, அதன் மீது சாக் பொடியினைத் தூவினார் போட்டியாளர். அவ்வளவுதான், அதுவரை மிகவும் வேடிக்கையான ஒரு ஓவியமாக இருந்த அந்த ஓவியம் திடீரென, ஒரு ஆணின் முகத்தை கொண்ட மிக அழகான ஓவியமாக மாறியது.
ஆச்சர்யத்தால் வாயடைத்துப்போனார்கள் நடுவர்கள். தங்களின் தவறை உணர்ந்த அவர்கள், அந்த போட்டியாளரை கட்டித் தழுவி தங்களின் வருத்தத்தினை தெரிவித்தனர். https://www.youtube.com/watch?v=iMj5kkcHxSU
Post a Comment