பௌத்த தேரர்களை இழிவுபடுத்துவது, வெட்கம்கெட்ட செயலாகும்
நாடாளுமன்றில் பௌத்த பிக்குகள் இழிவுபடுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றின் வரப்பிரசாதங்களை பயன்படுத்தி மாநாயக்கத் தேரர்கள் இழிவுபடுத்தப்படும் வகையில் கருத்து வெளியிடப்படுவதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கலாநிதி பெல்லன்வில விமலரதன தேரரை இழிவுபடுத்தும் வகையில் நாடாளுமன்றில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் நான் மன்னிப்பு கோருகின்றேன். நாடாளுமன்றில் பௌத்த மாநாயக்கத் தேரர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துவெளியிடுவது வெட்கம் கெட்ட செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
In my view...you are the crook in this government...
ReplyDeleteI am sure...
Don't you know they maintain double standards from time immemorial.Book of laws is for minorities. People of the majority escape under impunity law prevailing in this country.
ReplyDelete