Header Ads



"இலங்கையை இராமாயண பூமியாக, அங்கீகரிக்க வேண்டும்"

இலங்கையை இராமாயண பூமியாக அங்கீகரிப்பதற்கு  இங்குள்ள அறிஞர்கள் ஊக்கம் காட்ட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் கொழும்பு கம்பன் விழாவின் மூன்றாம் நாள் அமர்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு தலைமையுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்  அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பஞ்ச ஈஸ்வரங்களை கொண்டிருப்பதால் இலங்கையை சிவபூமி என சிறப்பிக்கிறார்கள். ஆனால் இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதால் இலங்கையை இராமாயண பூமி எனவும் அழைக்கலாம்.அத்துடன், இலங்கை இராமாயண பூமி என்பதை உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே வருடந்தோறும் கம்பன் கழகம் கம்பனுக்கு விமரிசையாக விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையை பறைசாற்றுகின்றது.

ரம்பொட பிரதேசம் அனுமன் சீதையை தேடிய பகுதியாகவும் ராமர் படை இருந்தமையாலும் இங்கு சின்மயா மிஷனால் ஸ்ரீ பக்த ஹனுமன் ஆலயம் எழுப்பப்பட்டு உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் மலையகத்துக்கு வந்து வழிபாடு செய்வது மயைகத்துக்கும் இராமாயணயத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தொடர்ந்தும் வலுப்பெறச் செய்கின்றது.

இந்நிலையில், இலங்கை மக்களின் கர்ண பரம்பரைக் கதைகள் ஊடாகவும் புவிசார் அமைப்புகள் ஊடாகவும் கம்ப இராமாயணம் ஊடாகவும் இன்னும் பல ஆய்வுகளை எதிர் காலத்தில் முன்னெடுக்கவும், இலங்கையை இராமாயண பூமியாக  அங்கீகரிக்கவும் இங்குள்ள அறிஞர்கள் ஊக்கம் காட்ட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

4 comments:

  1. neee vra irukkira perachna kanama.... RSS ya koottit vanthaal....ramayana thesamaga seekrame arivittu viduvaargalanne
    Sollunganne sollunga..!!!

    ReplyDelete
  2. இலங்கையை இராமாயன பூமியாக ஆக்க ஆராய்சி செய்வதற்கு முன், இராமன் எனும் ஒருவர் வாழ்ந்தாரா என்பதை ஆராயுங்கள். தற்போதுள்ளவர்கள் வாழ்தற்கே சண்டை, இல்லாதவர்களைக்
    கொண்டுவந்து சண்டைக்கு மேல் சண்டையா?

    அரசியல் தலைவர்களுக்கு வேலையில்லையென்றால் எப்படியெல்லாம் யோசிப்பார்கள் தெரியுமா?

    காலடி எடுத்து வைக்காத புத்தர் பெருமான் இலங்கையில் வாழ்ந்ததாக சரித்திரம் கண்டுபிடித்த சண்டை நீங்காத நிலையில் இன்னுமொரு சரித்திரத்தை உருவாக்க ஆரம்பம்.

    ReplyDelete
  3. Unmail.raman.valnthar.enpathukku.atharankal.niraiya.undu.athu.indumathathtthilum.buththa.mathaththilum.undu.ethaipatri.arachchi.seiya.ni.aruda.ni.eppavanthavanda.nanka.athavathu.tamilanum.singalavanum.elankai.andathukku.niraiya.atharankal.varalarukal.undu.ninkal.srilankavil.varalaru.ellaiyada

    ReplyDelete
  4. IF this was part of a history then fine. But all of these are imaginations. Then how to make as Ramayana Land with imaginations.

    ReplyDelete

Powered by Blogger.