மனித கொலை வெறியாட்டத்தை ஒழிக்க, குர்ஆனிய சட்டமே தீர்வு
ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி)
இன்று உலகின் பல பாகங்களிலும் இடம் பெறக் கூடிய மிகவும் மோசமான அவலம் சிறுவர் துஷ்பிரயோகக்துடனான கொலையும் தனி மனித கொலை வெறியாட்டமும்தான் முன்னிலை வகிக்கிறது என்பதனை யாராலும் மறக்க முடியாத ஓர் எதார்த்தமாகும்.
உண்மையில் இப்படியான மிகவும் மோசமான மனிதயீன கொலை வெறியாட்டம் நாளாந்தம் தலைவிரித்தாட மிகவும் முக்கியமான கவலைக்குரிய காரணம் என்னவென்றால் மனித உயிரை பாதுகாக்கக் கூடிய கடினமான சட்டம் நாடுகளில் இல்லாமையே முதன்மைக் காரணம் என நாம் சொல்ல முடியும்.
ஏனனில் குறித்த குற்றத்தை செய்தவன் ஓர் குறிப்பிட்ட காலம் வரை சிறை கைய்தியாக இருந்து மீண்டும் அவன் சமூகத்தில் நடமாடக் கூடிய நிலையில்தான் எல்லாச் சட்டங்களும் அமைந்திருப்பது கவலைக்குரிய விடையமாகும்.ஏனனில் இப்படியான சட்டங்கள் அவனை மீண்டும் இப்படியான கொடூர செயல்களை செய்ய சந்தர்ப்பம் வளங்குகிறது.ஆனால் அவனால் கொல்லப்பட்டவர்களின் குடும்பம் கவலையோடும் கண்ணீரோடும் தங்களது அன்றாட செலவுகளைக் கூட நிவர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதுதான் இன்னும் எமக்கு கவலையை அதிகரிக்கிக்கச் செய்கிறது.
இன்னும் இப்படியான தனி மனித கொலை வெறியாட்டமும் கற்பரிப்பு அவலங்களும் ஆசிய நாடுகளிலே அதிகம் இடம்பெறுவதை கண்ணூடாக காண முடிகிறது.ஆனால் வளைகுடா நாடுகளில் இப்படியான மிகவும் மோசமான மனிதயீனச் செயல்கள் நிகழ்வது மிகவும் அற்பமாகத்தான் உள்ளது என்பதை நாம் அறிவோம்.ஏனனில் கொலைக்குக் கொலை என்ற அல் குர்ஆனிய சட்டம் அங்கு நடைமுறையில் இருப்பதே மிகவும் முக்கிய அம்சமாகும்.
ஆனால் சிலர் அல் குர்ஆனிய சட்டம் கொடூரமானது என்று விவாதம் செய்கிறார்கள். ஆனால் ஆச்சரியம் என்னவெனில் தங்களது குடும்பத்தில் இப்படியான நிகழ்வு நடந்தால் புனித அல் குர்ஆனிய சட்டமே மேலானது அதையே தீர்ப்பாக வழங்குங்கள் என்று ஒலிக்கும் குரல்களை காணமுடிகிறது. அன்மையில் சென்னையில் இடம்பெற்ற பள்ளி மானவியின் கூட்டு பாலியல் கொலையின் போதும் இலங்கையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பள்ளி மானவி வித்யாவின் கொலை ஆர்ப்பாடங்களிலும் புனித அல் குரான் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என மாற்று மத மக்கள் கோரிக்கை வைத்ததை நாம் எடுகோலாகக் காட்டலாம். அல்ஹம்துலில்லாஹ்.
இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கொலை,விபச்சாரம் அதிகரிப்பது யுகமுடிவின் அடையாளமாகும். எனவே இதனை ஞாபகத்தில் வைத்து எந்த நேரமும் எமக்கும் இப்படியான கொடூரம் நடைபெறலாம் என்பதனை நினைவில் வைய்த்து மரண சிந்தனையில் நல்லறன்கள் செய்வதோடு கொலையாளிகளுக்கு இப்படியான கடின சட்டங்களை அமுலாக்கி நடைமுறைப்படுத்தி மனித உயிர்களுக்கு உயர் பாதுகாப்பு வழங்க அரசிடம் கோரிக்கை வைப்போமாக.
100℅ true
ReplyDeleteஆசிரியர் ijmau.qias இல் இருந்து எந்த ஆதாரத்தையும் காட்டவில்லையே?
ReplyDeleteijma kiyas markathil ullatha! allahuakbar
ReplyDeleteலாஇலாஹ இல்ல அல்லாஹு வஇஜ்மஉ வ கியாசு என்று கலிமா சொன்னாங்களோ?
ReplyDelete