Header Ads



முஸ்லிம் மாணவனை முழந்தாளிட்டு வணங்குமாறு, பாடசாலையில் வற்புறுத்தல்

பௌத்த மத பாட­சா­லையில் பயிலும்  முஸ்லிம்  மாணவன்  ஒருவன் தினமும் காலை மத நிகழ்வின்  போது பெளத்த­ ம­த­குரு  ஒரு­வ­ரையும், ஆசி­ரி­யர்­க­ளையும் முழந்­தா­ளிட்டு வணங்­கு­மாறு கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக மாண­வனின் பெற்­றோ­ரினால் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் செய்­யப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பான  விசா­ரணை நேற்­றுக்­ ஆணைக்­கு­ழுவில் இடம்­பெற்­றது. 

கள­னிய ஸ்ரீ ராஹுல வித்­தி­யா­ல­யத்தில் இவ்­வாறு தனது மகன் பெளத்த குரு­வையும், ஆசி­ரி­யர்­க­ளையும் வணங்­கு­மாறு கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக  பாட­சா­லையில் முதலாம் தரத்தில் பயிலும்  வத்­தளை, ஹுணுப்­பிட்­டி­யவைச் சேர்ந்த மாணவனின் பெற்­றோர்­க­ளி­னாலே மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பாட­சா­லையின் அதி­ப­ருக்கு எதி­ராக இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

மகன் முஸ்லிம் என்­பதால் இவ்­வாறு வணங்­கு­மாறு கட்­டா­யப்­ப­டுத்­து­வது இஸ்­லாத்­துக்கு எதி­ரா­ன­தாகும் எனவும் பெற்றோர் தெரி­வித்­தனர். 

பாட­சா­லையின்  தரப்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த  அதிபர் இவ்­வாறு முஸ்லிம் மாணவன் பெளத்த  மத­கு­ரு­வையும் ஆசி­ரி­யர்­க­ளையும்  வணங்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­ப­டு­வது  உண்மை என்­பதை  ஏற்­றுக்­கொண்டார் என்­றாலும்  இது பாட­சா­லையில் பின்­பற்­றி­வரும் நடை­முறை என்­பதால் இதனை மாற்றிக் கொள்ள முடி­யாது என்றும் தெரி­வித்தார். 

இரு­த­ரப்­பி­ன­ரையும் விசா­ரித்த மனித உரிமை ஆணைக்­குழு ஒரு தீர்­மா­னத்தை எட்ட முடி­யாத நிலையில் எதிர்­வரும் 14  நாட்­க­ளுக்குள் இரு­த­ரப்­பி­ன­ரி­டமும் சம்­பவம் தொடர்­பான எழுத்து மூல விளக்­கங்­களைக் கோரி­யுள்­ளது. 

பாட­சா­லையின் தரப்பில் அதிபர் பிரி­வுக்குப் பொறுப்பான ஆசிரியர் மற்றும் வகுப்பு  ஆசிரியர் என்போர் ஆஜராகியிருந்தனர்.

பெற்றோர் தரப்பில் RRT அமைப்பின் சட்டத்தரணிகள்  சிராஸ் நூர்தீன், சைனாஸ் மொஹமட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். 

 ARA.Fareel

11 comments:

  1. இந்த முஸ்லிம் மாணவனுக்கும் பெற்றோருக்கும் பைத்தியமா அவர்களுக்கு வேறு பாட சாலை கிடைக்க வில்லைய உலகம் விசாலா மானது உங்களின் கடமைகளை செய்ய முடிய வில்லை என்றால் வேறு இடத்திற்கு ஹிஜ்ரத் சொல்லுங்கள் என்பதை அறியாதவர்கள்

    இவர்களுக்கு முதலில் இஸ்லாம் என்றால் என்ன என்று கட்டு கொடுங்கள் பின்னர் இவரின் பெளத்த பாடசாலையில் கல்வி கற்பதை பட்டி பேசுவம்

    ReplyDelete
  2. Double Standard.

    It is clear that, no one can force another person to follow certain religion.

    Constitution of the country clearly states the FREEDOM of FOLLOWING a religion ONE Citizen wanted.

    ReplyDelete
  3. பவத்த பாடசாலை என்று தெரிந்தும் அங்கே மாணவனை சேர்த்துவிட்டு, எல்லா மாணவர்களும் பவத்த முறைபப்டி செய்யும் ஒரு கலச்சார செயலை செய்ய மாட்டேன் என்று அடம் பிடிப்பது தவறாகும். சிறிய வயது மாணவர்களை மத ரீதியாக பிரிப்பதே பெரிய தவறு. ஒன்றும் தெரியாத வயதிலேயே வேறுபாடுகளை விதைத்தால், அவர்கள் வளன்ர்து பெரியவர்கள் ஆகும் பொழுது, இன ரீதியான முறுகல்கள் ஏற்படுவது ஒன்றும் செய்ய முடியாது.

    ReplyDelete
  4. Admit your child in another school, why should we go to BUddist or Christian school educate them with manner which will we accepted by Allah

    ReplyDelete
  5. Athu Sari Ean boutha schoola ungada pillaiyar serththa ?

    ReplyDelete
  6. Why do you put your kids in to you Sinhalese schools in the first place.? He is still young you can still change him to a Muslim school.

    ReplyDelete
  7. இவ்வலவு சிறிய வயதில் அந்நிய பாடசாலையில் சேர்த்தால் அந்த பிள்ளைக்கு எந்த விதமான இஸ்லாமிய அறிவே இல்லாமல்தான் வளரும்.இவ்வாறு வளர்ந்தவர்களில் ஒருத்தர்ர்தான் முசம்மில் போன்ற முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கை விடும் பேர் தாங்கி முஸ்லிம்கள்.ஏன் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பாடசாலைகள் இருக்கும் போது அந்நிய மதக்கலச்சாரத்தை அதிகரிக்கும் பாடசாலையில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.இந்த பிள்ளையின் பெற்றோரிடம் அறவே இஸ்லாம் என்று ஓன்று இருந்திருந்தால் இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள்

    ReplyDelete
  8. In Muslim Schools you have to pay huge amount as Donation (Bribe), and they defend it as donation without receipt or bills, it's widely happens in Matale, and parents don't have option but to enroll their children in non-muslim school, so we cant blame parents.

    ReplyDelete
  9. RELIGIOUS FREEDOM IS HUMAN RIGHT. OR PUT HIM IN MUSLIM ENVIRONMENT TO PRACTICE ISLAM. Mr. Hari ask ur children to pray almighty 5 times. Pls. learn right religion to save from Hellfire. Thats ur truth love for ur family.

    ReplyDelete
  10. Some Muslim schools have Hindu children . We never heard that
    they were forced follow Muslim customs or morning assembly
    reciting . Many popular Sinhala and missionary schools have
    Muslim children and stories like this are not common in all
    schools . But if parents find unwanted pressure or force
    to their children , they must take action against it .
    School rules should not violate rights and freedom of
    children's faiths and education.

    ReplyDelete
  11. இருக்கின்ற குழப்பங்கள் போதாதென்று இது வேறா...?

    ReplyDelete

Powered by Blogger.