Header Ads



எகிப்து விமானம் கடத்தப்பட்டபோது, விமானத்தில் ஏற்பட்ட சுவாரஸ்யங்கள் (விபரம் இணைப்பு)


கெய்ரோவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்ட போது விமானத்தில் ஏற்பட்ட சுவாரஸ்மான சம்பவங்கள் தொடர்பாக பயணி ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோவுக்கு சென்றுக் கொண்டிருந்த எகிப்து ஏர் விமானத்தை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்று ஸைப்ரஸ் நாட்டில் தரையிறங்குமாறு செய்தார்.

முதலில் இது தீவிரவாத செயல் என்று கூறப்பட்டது. பின்னர் விமானத்தை கடத்தியது எகிப்தை சேர்ந்த எல்பிதின் முஸ்தபா என்பதும் ஸைப்ரஸ் நாட்டில் உள்ள தனது முன்னாள் மனைவியை பார்ப்பதற்காக விமானத்தை கடத்தியதும் தெரியவந்தது.

இந்நிலையில் கடத்தலின் போது விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை குறித்து அப்துல்லா எல் அஷ்மவி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த சம்பவம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.

ஆனால் நடுக்கடலுக்கு மேல் வயிற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறும் நபருடன் கடத்தப்பட்ட விமானத்தில் இருப்பது என்பது வலி நிறைந்த ஒன்று.

கடத்தல் தொடர்பாக பதற்றமடைந்த பயணிகளை அமைதிப்படுத்துவதில் எகிப்து விமான குழுவினர் திறமைசாளிகள்.

குறிப்பாக விமான பணிப்பெண்கள், கடைசி வரை அவர்கள் பயணிகளை நோக்கி புன்னகைத்தவாரே  இருந்தனர்.

ஒரு எகிப்தியர் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சத்தமாக அழைத்தப்படி இருந்தார்.

மற்றொரு கணவரோ தனது மனைவியை அழைத்து அவருக்கு தெரியாமல் வங்கியில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.

அப்போது, அந்த மனைவி விமானம் கடத்தப்பட்டுள்ளது என்பதையும் மறந்து எந்த வங்கியில் பணத்தை பதுக்கியுள்ளீர்கள் என்று கணவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.