கொரியாவின் கியாவும், ஹையுண்டாய்யும் இலங்கையில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கின்றன
கொரியாவின் கியா மற்றும் ஹையுண்டாய் கார் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில் தமது தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச வர்த்தக விவகார பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் வேக்ஸ்வேகன் நிறுவனம் மிக விரைவில் தனது தொழிற்சாலை ஒன்றை இலங்கையில் நிறுவ உள்ளது.
புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதார கொள்கைகள் காரணமாக உலகில் பிரபலமான முதலீட்டாளர்கள் இலங்கைக்கு முதலீடுகளுக்காக வரவுள்ளனர்.
இதன் மூலம் நாடு வேகமாக அபிவிருத்தியடையும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment