ஊழல் செய்த கோடீஸ்வரருக்கு, மரண தண்டனை - ஈரான் நீதிமன்றம் தீர்ப்பு
ஈரான் நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் பில்லியன் தொகையில் ஊழல் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஈரான் நாட்டை சேர்ந்த பபாக் ஷன்ஜானி என்பவர் 13.5 பில்லியன் டொலர் சொத்துள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்.
ஆனால், பல வருடங்களாக ஈரானில் உற்பத்தியாகும் எண்ணெய் வளங்களை அரசாங்கத்திற்கு தெரியாமல் கடத்தி வந்துள்ளார்.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்திருந்த காலக்கட்டத்தில் பபாக் இதுபோன்ற கடத்தல் செயல்களில் ஈடுப்பட்டதால் ஈரான் நாட்டிற்கு பெரும் பொருளாதார இழப்பீடு ஏற்பட்டது.
ஈரான் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் பபாக் செய்த ஊழல் குற்றங்களால் அரசுக்கு சுமார் 2.8 பில்லியன் டொலர் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன் விளைவாக, கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் பபாக் கைது செய்யப்பட்டார்.
பபாக் மீதான இறுதி விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘ஊழல் செய்த நாட்டிற்கு பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய பபாக்கிற்கு மரண தண்டனை விதிப்பதாக’ தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், ஊழல் செய்த அத்தனை பணத்தையும் பபாக் உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment