Header Ads



ஹூசைனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், வீரவன்ச விடுதலை


சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ஸ உட்பட தேசிய சுதந்திர முன்னணியின் 7 உறுப்பினர்களை தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து தேசிய சுதந்திர முன்னணியினர் கடந்த பெப்ரவரி மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

தேசிய சுதந்திர முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்றிருக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு 6 மணி முன்னர் அனுமதி பெற வேண்டும் என்ற போதிலும் அவர்கள் அவ்வாறான அனுமதியை பெறவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை ஜூன் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், எதிர்வரும் 26 ஆம் திகதி கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலங்களை வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.