ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக போராட, அஞ்சப் போவதில்லை - பொன்சேகா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படக்கூடியவரல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செயற்பட்டால் அதற்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தலைவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் சேவையாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சிக்கு நல்ல தலைவர்களை தாம் தெரிவு செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தற்போதைய ஜனாதிபதி தூய்மையானவர் எனவும் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக அரசியல் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்தால் அவருக்கு எதிராகவும் போராடுவதற்கு அஞ்சப் போவதில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Post a Comment