ஒசாமா பின்லாடன் குறித்து அமெரிக்கா, வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் தனது தனிப்பட்ட செல்வத்தில் சுமார் 29 மில்லியன் டொலர்களை ஜிஹாத் போராட்டத்திற்காக விட்டுச் சென்றிருப்பது அவரது இறுதி விருப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க படையின் சுற்றிவளைப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு பின்லாடன் கொல்லப்பட்டார்.
பின்லாடன் தங்கி இருந்த பாகிஸ்தானின் அபோதாபாத் வளாகத்தில் இருந்து அமெரிக்க படையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஒருபகுதி அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதில், பின்லாடனின் இறுதி விருப்பமும் உள்ளடங்குகிறது.
இதில் தனது விருப்பத்திற்கு கீழ்படியுமாறு அவர் தனது குடும்பத்தினரை கேட்டுக்கொண்டுள்ளார். அல்லாஹ்வின் பொருட்டு ஜிஹாத் போராட்டத்திற்காக அதனை செலவிடும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த செல்வம் சூடானில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அது பணமாக அல்லது சொத்தாக இருப்பது என்பது குறித்து விபரம் இல்லாமல் உள்ளது. 1990களில் பின்லாடன் சூடான் அரசின் விருந்தாளியாக ஐந்து ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார்.
எனினும் எவ்வாறு வாரிசுரிமை பகிரப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இல்லை.
வெளியாகி இருக்கும் ஏனைய ஆவணங்களில், மனித இனத்தை பாதுகாக்க பேராபத்துக் கொண்ட காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுமாறு அவர் அமெரிக்கர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் தனது மனைவியின் பல்லில் கண்காணிப்புக் கருவியை பொருத்தியிருக்கலாம் என்றும் பின்லாடன் அச்சத்தில் இருந்துள்ளார். அத்தோடு செப்டெம்பர் 11 தாக்குதலில் 10 ஆண்டு பூர்த்தியின்போது பாரிய ஊடக பிரசாரம் ஒன்றை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
Post a Comment