"முஸ்லிம் காங்கிரஸை மூடிவிட்டு" பஷீர் சேகுதாவூத்
தனியான முஸ்லிம் அலகுக்கான கோரிக்கையானது முற்றிலும் நியாயமானதேயாகும். இதுவே, முஸ்லிம் சமூகத்தையும், அதேபோல முஸ்லிம் அரசியற் கட்சிகளையும் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும் என முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையை பற்றிய ஒரு தெளிவுபடுத்தலுக்காக இந்த ஊடக அறிக்கையை எழுதுகிறேன். நான் மேற்படிக் கலந்துரையாடலின் போது ஒரு 'தனி முஸ்லிம் அலகின்' அவசியம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
இவ்விடயம் ஏனைய மொழிகளில் 'ஒரு தனி முஸ்லிம் அரசு' என்பதாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதை வேண்டுமேன்றே செய்யப்பட்ட ஒன்றாக நான் கருதாவிட்டாலும், தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும். எவ்வாறாயினும் தமிழ் ஊடகங்கள் நான் பேசியவாறே செய்திகளை வெளியிட்டிருந்தன.
என்னுடைய உரையில் நான் குறிப்பிட்ட தனி முஸ்லிம் அலகு 'தனி முஸ்லிம் அரசு' என்பதாக தவறான மொழியாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு எமது சமூகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சிலரினால் விமர்சிக்கவும் பட்டிருக்கிறது.
முஸ்லிம் அரசியலும் சமூகத் தோற்றப்பாடும், தமிழ் தேசியவாதத்தை உள்ளடக்கிய பலதரப்பட்ட காரணிகளைச் சூழ்ந்தே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினாலேயே ஆரம்பத்தில் தனியான முஸ்லிம் அலகுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தேசிய ஐக்கிய முன்னணியின் உதயத்துடன், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான ஆரம்பக் கோரிக்கை அப்படியே இருக்க, தேசிய அரசியலி;ல் தலைவர் முனைப்பு காட்டத் தொடங்கினார். காலம், இடம், சூழ்நிலைகளுடன், சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு, அன்றைய தேவைக்கு ஏற்ப சரியான நேரத்தில், தகுந்த தீர்மானங்களை எடுத்து அவர் செயற்பட்டார்.
ஏனைய தேசியத் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் பொருளாதா, கலாச்சார, மதப் பாதுகாப்பை போலவே அரசியல் அங்கீகாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் கருதியிருந்தார். இது எமது மறைந்த தலைவரிடம், இணக்க அரசியலுக்கான மனமாற்றத்தை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு வரைபில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 'தென் கிழக்கு மாகாணம்' என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 'அகண்ட தென் கிழக்கு' எனும் தலைப்பில் தமிழ் மொழியிலான நூல் ஒன்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நூலில், தென் கிழக்கு மாகாணத்தின் கீழ் வரக்கூடிய, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும், வடக்கிலும் வாழும் முஸ்லிம்கள் குறித்து விளக்கமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் விளைவாக அது 'நிலத்தொடர்பு அற்ற மாகாணம்' (ழேn-ஊழவெபைரழரள Pசழஎinஉந) என பெயரிடப்பட்டது. நான் ஏன் இவ்விடயங்களை குறிப்பிடுகிறேன் என்றால், எமது மறைந்த தலைவர் எந்தக் கட்டத்திலும், முஸ்லிம் சுயநிர்ணயக் கோட்பாட்டை கைவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே.
இலங்கை சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே, முஸ்லிம்கள் எப்போதும் ஐக்கிய இலங்கைக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர். சோல்பரி பிரபு அன்றிருந்த சட்ட சபையில், இனத்துவ அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையை பிரிப்பது பற்றி குறிப்பிட்ட போது, உடனே தனது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்ற மறைந்த டாக்டர் டி.பி. ஜாயா அவர்கள், இலங்கை முஸ்லிம்கள் ஒரே நாடாக தங்கள் ஏனைய இன சகோதரர்களுடன் இணைந்து வாழ்வதையிட்டு சந்தோசப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பிரதியுத்தரமாக, மறைந்த கௌரவ எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள், 'நாங்கள் இதற்காக, எங்களது முஸ்லிம் சகோதரர்களுக்கு நிரந்தரக் கடன்பட்டிருக்கிறோம்' (அபி அபே முஸ்லிம் சஹோதரயன்ட சதாகாலட்டம நயய்) என்றும் குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டு யுத்தமும், அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டியிருந்த வன்முறை நிகழ்வுகளும் தோன்றும் வரை தனித்துவ அடையாள அரசியலுக்கான தேவைகள் எழவில்லை.
முஸ்லிம் சமூகத்தினது சமூக நலன்களும் அரசியல் அபிலாசைகள் சம்பந்தப்பட்ட முடிவுகளும் இந்நாட்டின் உயர் தலைவர்களிலேயே பெருமளவு தங்கியிருந்தது என்பதை நிருபிப்பதற்கான ஏராளமான சான்றுகளை வரலாறு வழங்கியிருக்கின்றது. கடந்த பல வருடங்களாக நாம் இன ஒதுக்கல்களுக்கும் பின்னடைவுகளுக்கும் முகம் கொடுத்திருந்தோம். முஸ்லிம்களின் பாதுகாப்பு சமூக, நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நாட்டின் தலைமைத்துவத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதெல்லாம் இந்நாட்டின் தலைமைத்துவங்கள் கடந்த காலங்களில் சாதகமாகவும், பாதகமாகவும் இருந்திருக்கின்றது.
முஸ்லிம் அபிலாஷைகளுக்கான கோரிக்கை விடுக்கப்படும் போதெல்லாம், நாட்டில் என்றும் இருந்திருக்காத விடயமான 'ஜிஹாத்' என்பதுடன் இதனைப் பின்னிப்பிணைத்து அல்லது குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். எமது சமூகத்தை வன்முறை சார்ந்த இனமாகப் படம் பிடித்துக்காட்டுவது ஒரு நாகரீகமாக மாறிவிட்டிருக்கிறது. ஜிஹாத் அல்லது அதனையொத்த எதுவுமே, நாட்டின் பாதுகாப்புக்கோ அல்லது ஏதேனும் சமூகத்துக்கோ என்றும் அச்சுறுத்தலாக இருந்ததற்கான சான்றுப்பதிவுகள் எதுவுமில்லை. தங்களது அரசியல் இலக்கை அடைந்து கொள்வதற்காக, அழிவைத் தூண்டி, வன்முறைக்கு ஆதரவளிக்கும் அந்தரங்க நோக்கமுடைய ஒரு சிலரின் தந்திரமான செயற்பாடாகவே இது அமைந்திருக்கிறது.
ஆகையால், சமூகத்தின் அரசியல் தலைவர்களாகிய நாம், நிரந்தரமானதும், நீடித்திருக்க கூடியதுமான தீர்வுகளை வழங்க வேண்டியிருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் உயர் தலைமைத்துவங்களின் கருணையை எதிர்நோக்கிக் காத்திருப்பதை விட சமுதாயத்தின் பாதுகாப்பும், நலனும் சார்ந்த விவகாரங்களுக்கான ஒரு முறைமையை உருவாக்குவதற்கும் அதனை உத்தரவாதப்படுத்திக் கொள்ளவும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியிருக்கின்றது. வன்முறைகளின் விளைவான இன ஒதுக்கல் மற்றும் அடக்குமுறைகளை அனுபவித்ததற்கான அனுபவங்களையும் சாட்சியங்களையும் நாம் கொண்டிருக்கின்றோம். ஆகையால் எதிர்காலத் தலைமுறைகள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளைத் தம் கையில் எடுப்பதற்கு அவசியமற்ற நிலைமையை முஸ்லிம் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். எமது எதிர்காலத் தலைமுறைகளுக்கான சமத்துவமும், நீதியும்;, சமாதானமும் மிக்க எதிர்காலத்தையும், சக வாழ்;வையும் உறுதிப்படுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடு எமக்கிருக்கிறது.
தமிழின விடுதலைக்கான N;பாரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற அநீதிகளுக்காக இன்று தமிழ் சமூகம் நீதியை வேண்டி நிற்கின்றது. அந்த நீதிக்கான தேடல் என்பது அத்தகைய அநீதியை இழைத்தவர்களுக்கு எதிராக அல்லாமல், தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற தேடலாக அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் தான் முஸ்லிம் சமூகமும், 1990களில் நிகழ்ந்த மோசமான சம்பவங்களினால் ஏற்பட்ட உடைமை, உயிர் இழப்புகளுக்காக நீதி கோரி நிற்கிறது. அந்த நீதியும்; முஸ்லிம் சமூகத்தினது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக அமைந்திருக்க வேண்டும். எனவே இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைக்கு இரண்டு வித்தியாசமான தீர்வுகளை வழங்குவது நீதி வழங்கலாக அமையாது.
தற்போதைய ஆட்சியில் கூட தமிழர் பிரச்சினைகளுக்கு மட்டுமே கவனமும்;, முக்கியத்துவமும்; வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. முஸ்லிம் அபிலாசைகள் குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இரு சமூகங்களும் அவலங்களையும், தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் கொண்டிருக்கின்றன. ஆகையால் இரு தரப்பும் சரியான கோணத்தில் இருந்து குரலெழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. இதில்; அரசியற் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அரசியற் கட்சிகளும் தவறிழைத்தால் அவர்கள் இறுதி முடிவாக, தங்களது தொகுதிகளி;ல் தங்கள் வெற்றி வாய்ப்புகளுக்காக தேசியக் கட்சிகளில் சங்கமாகி, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாசைகளைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும். இன்னும் இந்நிலை முஸ்லிம் அரசியல் கட்சிகளில் இருந்து பெருமளவு மக்களை வெளியேறச் செய்து, முஸ்லிம் கட்சிகளை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதோடு சமூகத்தின் பேரம் பேசும் சக்தியையும் இழக்கச் செய்துவிடும்.
முஸ்லிம் இளைஞனின் கொலை குறித்து சரியான நடவடிக்கை எடுப்பதோ அல்லது முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து அவர்களுக்கு எதிரான தீவிரக் கருத்துக்களை கூறிய மதகுருவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதோ இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி வைக்கும் நடவடிக்கையாக அமையாது. மாறாக அது நாட்டின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்;ட நிதானமாகவும் உறுதியாகவும் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை மட்டுமேயாகும். இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் இது குறித்து அரசாங்கத்துக்கு எமது மரியாதையயும் நன்றியையும் தெரிவிக்கி;றோம்.
எனவே, தனியான முஸ்லிம் அலகுக்கான கோரிக்கையானது முற்றிலும் நியாயமானதேயாகும். இதுவே, முஸ்லிம் சமூகத்தையும், அதேபோல முஸ்லிம் அரசியற் கட்சிகளையும் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். இம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் நாம் எமது கோரிக்கைகளை முன்வைக்கத் தவறுவோமாயின் அது பெரும் வரலாற்றுத் தவறாகி விடும். அதுமட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸை மூடிவிட்டு அதன் பெயர்ப்; பலகையை வைத்து, சொந்த அரசியலைச் செய்ய விரும்புகின்றவர்களுக்கான வெற்றியாகவே அது அமைந்து விடும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேகு தாவுத் அவர்களே, முஸ்லிம்களின் தனி அலகு என்ற கோசத்தை மட்டும் அறிக்கைகளில் சொல்வதால் தான் இழந்த அரசியல் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் முயற்சி செய்வதாகவே எங்களுக்கு தெரிகிறது. அப்படி இல்லையாயின் காரண கர்த்தாக்களை ( அரசியல் அதிகாரம், பொருளாதாரம், இலங்கை முழுதும் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு, போன்ற இன்னோரன்னே காரணங்களை ) சரியான, புள்ளி விபரங்களுடன், ஆவணப்படுத்தளுடன் மக்கள் முன் வையுங்கள்.
ReplyDeleteவடக்கும் கிழக்கும் இணைந்தால், தனி அலகு என்ற ஒரு கோரிக்கையை தலைவர் அஷ்ரப் அவர்கள் முன் வைத்தார்கள். அதில் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள், என்னவென்றால் அன்றைய அரசியல் சூழ்னிலையை உற்று நோக்க வேண்டும். அன்று தமிழர் போராட்டம் மிகவும் பலம் பொருந்திய நிலையில் இருந்தது. வடக்கு கிழக்கு இணைப்பை தடுப்பதற்கான ஒரு கோரிக்கையாகவும் அதை பார்க்கலாம். முஸ்லிம்களுக்கு தனி அலகு என்றால் வட கிழக்கில் வாழும் சிங்களவர்களுக்கும் தனி அலகு. கிழக்கில் உள்ள வளங்களை பிரிப்பதில் உள்ள பிரச்சினை. இப்படி பல இடியப்ப சிக்கல் உள்ள விடயம் இங்கு காணப்படுகிறது. ஆக தலைவர் அஷ்ரப் அவர்களின் பழைய கதைகளை கூறி ( இந்த அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் எடுத்துத் தர முடியா விட்டால் இந்த அஷ்ரப் ஈழம் எடுத்துத் தருவான் என்றும் கூறி உள்ளார் அப்போ ஈழமா எடுத்து கொடுக்க போகிறீர்கள்?? ) உங்களின் வங்குரோத்து அரசியலை சரி கட்டி கொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம்.
நீங்கள் முஸ்லிம்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் உங்களை கண்டாலே எங்களுக்கு பயமாக உள்ளது. சுய நலத்துக்காக நீங்கள் எதையும் செய்வீர்கள். ஈரோஸ் இல் இருந்து (முஸ்லிம்களுக்கு வைத்தீர்கள் ஆப்பு. பின் அவர்களுக்கும் வைத்தீர்கள் ஆப்பு). .. ராஜபக்ச வரை உங்கள் அனைத்து அரசியல் நகர்வுகளையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.
Enter your comment...யாருடைய தேவைக்காக இவர் இதைப்பேசிக்கொண்டிருக்கிறார்?. சமூகத்தை விற்று இளைஞர்களை உசுப்பேற்றி தன்னை கோடீஸ்வரனாக ஆக்கிக்கொண்டதுன் முஸ்லிம் சமூகம் புலிப்பயங்கரவாதத்தினாலும் பேரினவாதத்தினாலும் வேட்டையாடப்பட்ட வேளைகளில் அவற்றுக்கெதிராக வாய்திறக்காமல் அமெரிக்காவுக்கு ரகசிய அறிக்கைககளை அனுப்பி அது விக்கிலீக்ஸ் ஊடாக வெளியாகி இவருடைய சுயரூபத்தை வெளிக்காட்டியது. கிழக்கில் அமைதி நிலவும் தற்போதைய சூழலில் தனிஅலகைப்பற்றி இவர் பேசுவது அப்பட்டமான சமூகத்துரோகமாகும். சமூகத்துக்கு நல்லது செய்யவேண்டும் என்று இவரைப்போன்றவர்கள் நினைத்தால் மௌனமாக இருப்பதே சிறந்தது.
ReplyDeleteஆஒஒ
ReplyDelete