கட்டாரில் நிந்தவூர் நலன்புரிச்சபையின் கிளை
-மு.இ.உமர் அலி-
நிந்தவூர் நலன்புரிச்சபையின் கட்டார் கிளையின் அங்குரார்ப்பண வைபவம் டோஹாவிலுள்ள மெசைமீர் -பாக்சமா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுமார் 170 சகோதரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நிந்தவூர் நலன்புரிச்சபையின் தலைவர் அல்ஹாஜ் யாகூப் ஹசன் சிறப்புரையாற்றுகையில் .
“மனிதர்களாகிய நாம் வாழும்காலத்தில், இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை அவனுக்கு பிடித்தமானமுறைகளிலே செலவிடுவதுடன் தான தர்மங்களிலும் சமூகசேவைகளிலும் தாராளமாக ஈடுபடுத்தவேண்டும்” என குறிப்பிட்டார்.
நிந்தவூர் நலன்புரிச்சபையின் உப தலைவர் பொறியியலாளர் தம்பிலெப்பை இஸ்மாயில் ,சருவதேச நிதி விடையங்களுக்கான முகாமையாளர் ரசீன் அஹமது ,அங்கத்தவர் அலியார் அஸ்வத்கான் ஆகியோர் கட்டார் கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வுக்காக இலங்கையிலிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டார் கிளையின் தலைவராக வங்கி முகாமையாளர் Y.l.யஹ்யா உப தலைவராக ரஸ்மி ஹசன் ,செயலாராக அர்சத் கரீம்,பொருளாளராக அசீஸ் அலியார் ,உதவிச்செயலாளராக நிம்சாத் அமீன் ஆகியோருடன் பிரதம இணைப்பாளராக முஹமது அசாம் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
why can't you work and live in SriLanka?
ReplyDeleteithula ethuna peru qoooesss
ReplyDelete