பெல்ஜியத்தில், இலங்கையருக்கு பாதிப்பில்லை
பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சின் சவென்ரெம் அனைத்துலக விமைான நிலையத்திலும், மெட்ரோ தொடருந்து நிலையத்திலும் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் இலங்கையர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரசெல்ஸ் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இவற்றில் ஒன்று தற்கொலைக் குண்டுதாரியினால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு என்று கருதப்படுகிறது.
இந்தக் குண்டுவெடிப்பில் விமான நிலையத்தின் கண்ணாடிகள் பெயர்ந்து விழுந்தன. பெரும் புகையும் எழுந்தது. பயணிகள் அலறியடித்தபடி தப்பி ஓடினர்.
இந்தக் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் கு்ண்டுவெடிப்பு இடம்பெற்று ஒரு மணிநேரம் கழித்து பிரசெல்ஸ், மால்பீக் தொடருந்து நிலையத்தில் மற்றொரு குண்டுவெடிப்பு இடம்பெற்றது.
இதிலும் பலர் கொல்லப்பட்டனர். குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பிரசெல்சில் இருந்து அனைத்து விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், மெட்ரோ தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பெல்ஜியம்- பிரான்ஸ் இடையிலான எல்லையும் மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தச் சம்பவங்களில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்றும், பெல்ஜியம் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment