காத்தான்குடியைச் சேர்ந்தவர், குருநாகல் விபத்தில் வபாத்
குருநாகல் மாவட்டம் கொக்கரல்ல பொலிஸ் பிரிவில் இன்று 12சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் மரணித்துள்ளதாக கொக்கரல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குருநாகல், கொக்கரல்ல பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் மட்டக்களப்பு காங்கேயனோடையை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் முன்னாள் உத்தியோகத்தரான முஹம்மத் பஷீர் (55) என்பவர் மரணமடைந்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை (11) இரவு 10 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த வேன் குருநாகல் கொக்கரல்ல பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்படத்தக்கது.
( பளுல்லாஹ் பர்ஹான்)
Post a Comment