இலங்கை அணியில் முரண்பாடு - தயாசிறி
கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர்கள் மற்றும் போட வேண்டிய ஓவர்களின் எண்ணிக்கை தொடர்பில் குறிப்பிட்டு, தனக்கு மெசேஜ் வருவதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரவிந்த டி சில்வா தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் நியமன நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தனக்கு இவ்வாறு மெசேஜ் வருவதாயின், மெத்தியூஸ் கூறுவது போன்று விளையாடத் தேவையான குழு இல்லையாயின் முன்னாள் தெரிவுக்குழு தொடர்பில் பேசிப் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு தெரிவுக் குழுவுடன் சில சில பிரச்சினைகள் காணப்பட்டதாகவும் புதிய தெரிவுக் குழுவுடன் புதிய பயணத்தை மேற்கொள்ள தற்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தெரிவுக் குழு தொடர்பில் பேச தனக்கு விருப்பம் இல்லை என, இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ள தயாசிறி ஜயசேகர, இலங்கை தேசிய அணியில் முரண்பாடு இருப்பதாகவும் அவை தீர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Post a Comment