Header Ads



அமெரிக்கா மீது பாய்ந்த, விளாமிடிர் புட்டின் (வீடியோ)


சிரியா பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு ரஷ்யா வந்துள்ள ஜான் கெரியை விளாடிமிர் புடின் கிண்டல் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாகவே பனிபோர் இருந்து வருகிறது. வெளிப்படையாக இல்லையென்றாலும் சிறு சம்பவங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் உள்நாடு போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் அரசியல் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெரி ரஷ்யாவுக்கு வந்தார்.

பின்னர் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஜான் கெரி இடையேயான சந்திப்பு மாஸ்கோவில் நடைபெற்றது.

அப்போது பேசிய புடின், உங்களின் உடமையை நீங்களே சுமந்துகொண்டு வருவதை பார்த்தும் ஆச்சரியமடைந்தேன்.

வெளியுறவுத்துறை அமைச்சரின் உடமையை கூட சுமக்க யாரும் இல்லாத நிலையில் அமெரிக்காவின் நிலை உள்ளதா என முதலில் நினைத்தேன்.

மேலும் உங்கள் கையில் உள்ள பேட்டியை பார்த்ததும் சிரியா விவகாரத்தில் சுமூகமாக போவதற்காக எனக்கு லஞ்சம் எடுத்து வந்துள்ளீர்கள் என நினைத்தேன் என்று நகைச்சுவையாக கூறினார்.

இதனை கேட்டு புன்னகைத்த கெரி, நாம் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது பெட்டியில் என்ன உள்ளது என்று காட்டுகிறேன்.

அதனை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் என தெரிவித்தார். இதனால் அங்கு சிரிப்பொலி எழுந்தது.

பின்னர் இருவரும் சிரியா மற்றும் உக்ரையின் விவகாரம் தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. https://www.youtube.com/watch?v=ksB4aez0dmg

No comments

Powered by Blogger.