பரிஸ் தாக்குதல் - தேடப்பட்ட பிரதான நபர், பெல்ஜியத்தில் கைது
ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்புத் தேடுல் வேட்டையில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் உள்ள மொலன்பீக் பகுதியில் முன்னதாக துப்பாகி சுடும் சத்தம் கேட்டது.
சலா அப்தேஸ்லாம் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ப்ரஸ்ஸல்ஸில் நடந்துவரும் ஐரோப்பிய யூனியன் -துருக்கி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பெல்ஜியப் பிரதமர் சார்லஸ் மிசெல் அவசரமாக அந்தக் கூட்டத்திலிருந்து புறப்பட்டச் சென்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டு பாரிஸில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். அப்தேஸ்லாம் இதில் பிரதான சந்தேக நபராகத் தேடப்பட்டுவந்தார்.
செவ்வாய்க்கிழமையன்று ப்ரஸ்ஸல்ஸில் நடந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட வீட்டில் சலாவின் கை ரேகைகள் கிடைத்தன.
ப்ரஸ்ஸல்ஸில் பிறந்த ஃபிரெஞ்சு குடிமகனான சலா அப்தேஸ்லாம் நவம்பர் தாக்குதல்களுக்கு முன்பாகவும் மொலென்பீக் பகுதியில் வசித்துவந்தார்.
பாரிஸ் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, அவர் மிகத் தீவிரமாக தேடப்பட்டுவந்தார்.
Post a Comment