புதிய குடியேற்றங்களை உருவாக்கும் பொறுப்பு பொன்சேக்காவுக்கு..!
புதிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கான ஹதபிம அதிகார சபை சரத் பொன்சேகாவின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே அரச திணைக்களம் இதுவாகும்.
கடந்த 16ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ளார்.
ஹதபிம அதிகார சபையின் புதிய குடியேற்றத் திட்டங்களின் ஊடாக கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கும் அதிகாரம் சரத் பொன்சேகாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான செயற்திட்டங்கள், நிகழ்ச்சி நிரல், கண்காணிப்பு ஆகிய செயற்பாடுகளும் இந்த அமைச்சின் பொறுப்புகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள குடியேற்றத்திட்டங்களின் போது கல்லோயாத் திட்டம் போன்று புதிதாக சிங்களவர்கள் குடியேற்றப்படும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகின்றது.
Post a Comment