ஹசன் அலி வரவில்லை, பஷீர் வந்தார்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பொது மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான சரத் பொன்சேகா, தயா கமகே, மனோ கணேசன் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டுள்ள இம்மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பங்குபற்றாமல் பகிஷ்கரிப்பு செய்துள்ளார்.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு வழங்கப்படாமையினால் அவர் கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டு, அதிருபதியுற்ற நிலையில் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக ஹசன் அலியுடன் சேர்ந்து இவரும் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
இம்முறை பஷீர் சேகுதாவூத்திற்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசன் அலி அவர்களின் மா..மா.. மாபெரும் தவறான முடிவாகவே இதை நாம் பார்க்கிறோம். கட்சிக்குள் இருந்து கொண்டு இந்த கட்சியை
ReplyDeleteநேர் பாதையில் இட்டுச் செல்ல துடிக்கும் உண்மை போராளிகளுக்கு மாபெரும் ஏமாற்றமே. முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு தனி நபர் சார்ந்த ( அவரின் விருப்பு வெறுப்புக்களுக்கு ) நிறுவனமாக, இயக்கமாக பயணிக்க முடியாது அது சமூகத்துக்கு ஆரோக்கியமானதும் அல்ல. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த கட்சி தான் முஸ்லிம்களின் தற்போதைய பலம். தற்போது முஸ்லிம் தலைமைத்துவத்தில் ( நம்பகத்தன்மை, சமூகத்தின் பார்வை, அரசியல் தூர நோக்கும் அறிவும்.......) ஒரு வெற்றிடம் உள்ளது என்பதற்காக நமது ஒற்றுமையை இழந்து அரசியல் அனாதைகளாக மாற முடியாது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
சேகு இஸ்சடீன், பேரியல் அஷ்ரப், அதவுல்லா, ரிசாத், ஹிஸ்புல்லா, புத்தளம் பாயிஸ்,....... மற்றும் பலருடன் ஹசன் அலியும் சேர்ந்து கொள்ளாமல் இருப்பதையே நாம் விரும்புகிறோம்.
இந்த கட்சியின் அரசியல் பயணத்துக்கு தனி நபர் ஒருவர் தடங்கலாக இருப்பதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்பதுடன், அவர்களின் தராதரம் பாராது மிகவும் கடுமையான ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.
"வாழ்க முஸ்லிம் காங்கிரஸ்... ஒலித்து ஓங்கட்டும் முஸ்லிம்களின் உரிமை குரல்...."
"போராளிகள்!" ...... சிரிப்புத்தான் வருது!! ஹிஹிஹீ !
ReplyDelete