மரணிக்கும் போதுதான், அரசியலைவிட்டு விலகுவேன் - மேர்வின்
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் வார்த்தைக்கு செவிசாய்த்து அதற்கேற்ப நடந்திருந்தால் மகிந்த ராஜபக்ச இன்றும் ஜனாதிபதிதான் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி, கொள்ளையிட்ட பசில் ராஜபக்ச பற்றியும், வெள்ளைவான் மூலம் பல மக்களை கடத்தி கொன்றுகுவித்த கொலையாளியான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பற்றியுமே நான் விமர்சித்து வந்தேன். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மதிப்பிற்குரிய ஒருவர். பசிலும் கோத்தபாயவுமே அவரை இந்த நிலைக்கு தள்ளியுள்ளனர்.மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் வார்த்தைக்கு செவிசாய்த்து அதற்கேற்ப நடந்திருந்தால் மகிந்த இன்றும் ஜனாதிபதிதான்.
அண்மையில் ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியினர் கூட்டம் வெற்றிகரமாகவே அமைந்தது. அதற்கும் எனக்கும் தொடர்பில்லை என்றாலும், இதுதான் உண்மை. அத்தோடு, நான் மரணிக்கும் போதுதான் அரசியலை விட்டு விலகுவேன். அதுவரை நான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை.
Post a Comment