Header Ads



அக்கரைப்பற்ற்றில் அரசியல் தலையீடுகள், குறித்து தலைமைகளுக்கு ஒரு மடல்

அல்ஹாஜ். ஏ.எல். மர்ஜுன். jp
இணைப்பாளர்,
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு,
அக்கரைப்பற்று

 ஆளுநர்,
ஆளுநர் செயலகம்,
திருகோணமலை,
கிழக்கு மாகாணம்.

ஐயா,

அக்கரைப்பற்று கிழக்கிலங்கையில் மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு ஊராகும். நாட்டின் நாலாபுறமிருந்தும் பல ஆயிரம் மாணவர்கள் கல்வித் தாகம் தீர்க்க அக்கரைப்பற்றை நாடி வருவது இவ்வூரின் தனிப்பெரும் சிறப்பாகும்.

கடந்த ஆட்சிக் காலத்தின்போது அனாவசியமான அரசியல் தலையீடுகளால் எமது பாடசாலைகளின் புனிதத் தன்மை சிதைக்கப்பட்டது. தகுதியற்றவர்கள் அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்தால் எமது கல்விக்கூடங்களை நிர்வகிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். மாணவர்களின் தேவைகளை கருத்திற்கொள்ளாது பல ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிற்போக்கான இத்தகைய செயற்பாடுகளைக் கண்டித்து விமர்சனங்களை முன்வைத்தவர்களின் குரல்கள் அரசியல் அதிகாரத்தால் அடக்கி வைக்கப்பட்டன.

கடந்த ஜனவரி 08ம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக மேதகு ஜனாதிபதியால் தாங்கள் நியமிக்கப்பட்டபோது நாங்கள் ஆனந்தமடைந்தோம். நிர்வாகத் திறனும் ஆளுமையும், அரச நிர்வாகத்தில் நீண்ட அனுபவமும் கொண்ட ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் எமதூரின் கல்வி நிர்வாகத்தின் சுயாதீனத்தையும் தரத்தினையும் மீண்டும் உத்தரவாதப்படுத்தி இழந்த பெருமையை மீட்டுக்கொள்ள முடியும் என்ற வலுவான நம்பிக்கையும் எமக்கு ஏற்பட்டது.

துரதிஷ;டவசமாக கடந்த காலத்தைவிடவும் மோசமான அரசியல் தலையீடுகளால் எமதூரின் கல்வியை இன்னும் சூனியத்துள் தள்ளுகின்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவது வேதனையளிக்கிறது. தங்களின் ஆளுகைப் பிரதேசத்துள் இத்தகைய சீர்கேடுகள் சர்வசாதாரணமாக முன்னெடுக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தைத் தருகிறது. உங்கள் நிர்வாகத்தின் மீது நாம் வைத்துள்ள அதீத நம்பிக்கைகள் வீணாகிவிடுமோ என்ற அச்சமும் தோன்ற ஆரம்பித்துள்ளது.

எமதூரின் தலைமைப் பாடசாலையான தேசியப் பாடசாலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்கு பொருத்தமான ஓர் அதிபர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இங்குள்ள ஒரு சில அரசியல்வாதிகளின் எடுபிடியாக செயற்படும் ஒருவர் தற்காலிகமாக இப்பாடசாலையை நிர்வகித்து வருகிறார். இதனால் தகுதிவாய்ந்த ஒரு அதிபரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தட்டிக்கழிக்கப் பட்டு வருவதாக நாம் கருதுகின்றோம்.

எமது கல்விக் கோட்டத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் (னுநுழு) பதவி வெற்றிடமானபோது முறையாக விண்ணப்பங்களைக் கோரி பொருத்தமான ஒருவரை நியமிக்காமல் மேற்குறித்த அரசியல் வாதிகளின் தலையீட்டால் அவர்களுக்கு வேண்டப்பட்ட ஒருவர் தகுதியற்றவராய் இருந்தும் தற்காலிகம் என்ற பெயரில் நியமிக்கப்பட்டு நீண்ட காலமாக கோட்டக்கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வருகிறார். இவரூடாக குறித்த அரசியல்வாதி பாடசாலைகளில் பல அதிகார துஷ;பிரயோகங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அக்கரைப்பற்றில் உள்ள மற்றொரு முன்னணிப் பாடசாலையான 1யுடீ தரத்திலான அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர் தனிப்பட்ட விரோதம் காரணமாக அரசியல் அதிகாரத்தின் அச்சுறுத்தல்களால் பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டு இலங்கை அதிபர் சேவை தரம் ஐஐஐ (ளுடுPளு ஐஐஐ ) ல் உள்ள ஒருவர் குறித்த அரசியல்வாதிக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தால் 1யுடீ தரத்திலான இப்பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் 1ஊஇ வுலிந ஐஐ தரத்திலான பாடசாலைகள் பலதில் அதிபர் தரத்தில் இல்லாதவர்கள் ஒப்பந்த (Pநசகழஅiபெ) அடிப்படையில் அதிபர்களாக செயற்பட்டு வருகின்றனர். அதிபர் தரத்திலுள்ள பலர் இருந்தும் கூட இத்தகையவர்கள் அரசியல் செல்வாக்கின் மூலம் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அக்ஃஅல் - முனவ்வறா கனிஷ;ட கல்லூரி, அக்ஃஸாஹிறா வித்தியாலயம், அக்ஃசேர் பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலயம், அக்ஃஅஸ்-ஸிறாஜ் ஜுனியர் வித்தியாலயம் என இப்பட்டியல் நீண்டு செல்கிறது.

இத்தகைய அரசியல் துஷ;பிரயோகத்தின் உச்சக்கட்டமாக அக்கரைப்பற்று பதுர் வித்தியாலத்தின் அதிபராக செயற்பட்ட ஒருவர் மற்றொரு பாடசாலைக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டு அவ்வதிபர் வெற்றிடத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3ஐஐ (ளுடுவுளு ஐஐ ) ல் வெறுமனே ஐந்து வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைகளின் நிர்வாக அதிகாரத்தை தம் வசப்படுத்தி அதன்மூலம் கல்விச் சமூகத்தை தமது அரசியல் அடிமைகளாக்கிக் கொள்வதற்காக இத்தகைய தரக்குறைவான அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக தற்போது வலயக்கல்விப் பணிப்பாளரையும் மாற்றுவதற்கான முயற்சிகள் இத்தகையவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மலர்ந்திருக்கும் நல்லாட்சியில் தங்களைப்போன்ற தகுதிவாய்ந்த ஓர் நிர்வாகத் தலைமையின் ஆளுகைப் பிரதேசம் ஒன்றில் இத்தகைய நல்லாட்சிக்கு விரோதமான அரசியல் அதிகாரத்தின் பிரயோகம் சர்வசாதாரணமாக இடம்பெறுவது தமது சமூகத்தையும் நாட்டையும் நேசிப்பவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

எமது ஊரின் கல்வியை மேலும் சீரழிக்கும் இத்தகைய விடயங்களில் தங்களது மேலான அவதானத்தைச் செலுத்தி அவசியமற்ற அரசியல் அழுத்தங்களில் இருந்து எமது பாடசாலைகளையும் கல்வி நிர்வாகத்தையும் மீட்டெடுத்து பொருத்தமானவர்களை முறையாகத் தெரிவுசெய்து நியமிப்பதன் மூலம் அவற்றின் தரத்தை உத்தரவாதப்படுத்தித் தரவேண்டும் என அன்பாகவும் தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் வேண்டிக் கொள்கிறோம்.


இவ்வண்ணம்
உண்மையுள்ள,

..........................................................
அல்ஹாஜ் ஏ.எல். மர்ஜுன்  jp

No comments

Powered by Blogger.