சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம் இளவயதினரின், வரலாற்று சிறப்புமிக்க நகர்வு
(அன்ஸிர்)
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு தேசங்களில் வாழும் இலங்கையர்களிடையே, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் இளம் பிரிவினரின் நகர்வு பலருடைய கவனத்தையும் ஈர்ப்பதாக அமைகிறது.
சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களின் நலன்களை பேணவும், மார்க்க ரீதியாக தமது பிள்ளைகளை வலுப்படுத்தி ஒன்றிணைப்பதற்காகவும் கடந்த 15 வருடங்களுக்கு முன் உதயமானதே ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம்.
அதன் வளர்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லே ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய இளம் பிரிவினராகும்.
இளம் அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளராக ஹஷீப் ஹனீப் செயற்படும் அதேவேளை ஜீஸான் ஜிப்லாள், அமான் அமீர், பஹ்மான் ரஹ்மான், வசீம் மொஹமட் உவைஸ் ஆகியோருடன் மேலும் 10 பேர் இணைந்து செயற்படுகின்றனர்.
உயர்தர கல்வி கற்கைளை தொடரும் இவர்களில் சிலர் பகுதிநேர தொழில் கற்கைளையும் மேற்கொண்டுள்ளனர்.
இவர்களினாலேயே இம்முறை ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் 2016 ஆம் வருடத்திற்கான இஸ்லாமிய சிறுவர் நிகழ்ச்சிகள் நேற்று 5 ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்ச்சியை கச்சிதமாக செய்துக்காட்டி, (ஏற்பாடு) நிகழ்வில் பங்கேற்ற அனைவரது பாராட்டையும் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் தம்மால் இதுபோன்ற நிகழ்வுகளை திறம்பட நடத்திக்காட்ட முடியுமென்பதையும் சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கு இந்த இளம் வயதினர் நிரூபித்துக் காட்டினர்.
மேடை அலங்காரம், மேடையமைப்பு, ஒலி - ஒளி ஏற்பாடு, அறிவிப்பாளர் பணி, பண்முக மொழியாற்றல், நவீன தொழிற்நுட்பங்களை கையாளுதல், பகலுலணவுக்கான உதவி (கோழி கழுவுதல்) உள்ளிட்ட பணிகளையும் செய்து, எதிர்காலத்தில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தையும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலையும் தம்மால் நிர்வகிக்க முடியுமென்பதையும் இவர்கள் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின் மூலம் பறைசாற்றினர்.
இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எவ்வகையிலும் முரணாகாத வகையில், தமது இலங்கை முஸ்லிம் பெற்றோர்களின் முழு அங்கீகாரத்துடன் செயற்படும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய இளம்வயதினர் ஐரோப்பாவின் ஏனைய தேசங்களில் வாழும் இலங்கை முஸ்லிம் இளவயதினருக்கும் முன்மாதிரிமிக்கவர்கள் எனலாம்.
ஐரோப்பிய தேசங்களில் வாழும் இலங்கை முஸ்லிம் பெற்றோர்களும் இவ்வாறு தமது பிள்ளைகளை ஒருங்கிணைத்து செயற்பட வைப்பதன் மூலம், இலங்கை முஸ்லிம்கள் ஐரோப்பிய தேசங்களில் ஒன்றுபட்டு நிற்கவும் வழிகிடைக்கும்.
அத்துடன் ஐரோப்பிய தேசங்களில் செயற்படும் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் நிறுவாகிகள் தமது காலத்திற்குப் பின், தாம் நிர்வகித்த அமைப்புக்களை அப்படியே கைவிடாமல் அல்லது அந்த அமைப்புக்கள் முடங்கிப் போகாமல் இருப்பதற்கும் இவ்வாறான இளம் அமைப்புக்களை உருவாக்கிச் செயற்படுவது காலச்சிறந்தது.
இந்த ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய இளம் வயதினர் வருடாந்தம் தமது தந்தைமார் சகிதம் ஒரு வதிவிட முகாமிலும் பங்கேற்கின்றனர். இதன்மூலம் அவர்கள் மேலதிக அறிவையும், அனுபவத்தையும் பெறுகின்றனர் என்பதுடன், காலத்திற்கேற்றவகையில், அவர்களின் வயதுக்கேற்ப சிறப்பு பயான் நிகழ்வுகள், மாதாந்த தப்ஸீர் வகுப்புக்களிலும் பங்குகொண்டு தமது மார்க்க அறிவையும் மேம்படுத்திக் கொள்கின்றமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
இதன்மூலம் சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுடைய பிள்ளைகள் இஸ்லாமிய விழுமியங்களுடன் வாழக்கூடிய வாய்ப்புகளுக்கான சூழ்நிலை உருவாகி வருவதையிட்டு நாம் மகிழ்வடையமுடியும்.
அல்லாஹ் இவ்வாறான இளம் சந்திதியினருக்கு தொடர்ந்து நல்வழிகாட்ட நாம் பிரார்த்திப்பதுடன், இதுதொடர்பில் அவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கு நமது ஆதரவை வெளிப்படுத்துவதும் இங்கு கட்டாயமகிறது.
Liebe haseef, ich wünsche dir für dein leben in islam
ReplyDeletealles gutte
Nafeel Mama
Assalamualaikum w. w.
DeleteJazakallahchair for your beautiful words, i hope to see you soon in Sri Lanka :).
Add me on FB if you have an account there.
Bis bald
Wasalam
Haseef
This comment has been removed by the author.
ReplyDelete