Header Ads



தெஹிவளைச் சம்பவம் எப்படி நடந்தது..? அனைவருக்கும் ஒரு படிப்பினை

-Vi-

தெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன்றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உட்பட நான்கு பேர் நேற்று சட­ல­ங்களாக மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

நேற்று காலை 10 மணிக்கு தெஹி­வளை பொலி­ஸா­ருக்குச் செய்­யப்­பட்ட முறைப்­பா­டொன்றை அடுத்தே குறித்த வர்த்­தகர், அவ­ரது மனைவி, அவர்­க­ளது மகள் மற்றும் அவர்­களின் உறவுக்காரர் ஒரு­வரின் மகள் ஆகியோரே இவ்­வாறு உயிரிழந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

கொழும்பு கேஷர் வீதியில் பிர­பல இலத்­தி­ர­னியல் வர்த்­த­க­ரான ஹுசைன் மெள­லானா (வயது 65), முன்­ஸிரா மெள­லானா வயது (58), ஹுஸ்னா மெள­லானா (வயது 13) ஆகிய ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­தோரும் அவர்­க­ளுடன் நேற்று முன் தினம் இரவு குறித்த வீட்டில் தங்­கி­யி­ருந்த அவர்­க­ளது உற­வுக்­கார சிறு­மி­யான நிஸ்னா மெள­லானா (வயது 13) என்ற சிறு­மி­யுமே இவ்­வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று காலை 10. 00 மணிக்கு தெஹி­வளை பொலிஸ் நிலையம் சென்­றுள்ள, உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் முன் வீட்டில் வசிக்கும் உற­வுக்­காரர், தனது முன் வீட்டில் உள்ள உற­வி­ன­ருக்கு ஏதோ இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அவர்கள் உடல் கருகி உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் முறை­யிட்­டுள்ளார். 

இத­னை­ய­டுத்து தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்­தாவின் கீழான பொலிஸ் குழு உடன் ஸ்தலத்­துக்கு சென்­றுள்­ளது. 

பொலிஸார் அங்கு செல்லும் போதும் இலக்கம் 40 பீ, கவு­டான, தெஹி­வளை எனும் முக­வ­ரியில் உள்ள குறித்த மூன்று மாடி வீட்டின் கீழ் மாடியின் கத­வு­களை உற­வி­னர்கள் உடைக்க முயற்சி செய்­து­கொண்­டி­ருந்­துள்­ளனர். முழு­மை­யாக அடைக்­கப்பட்டு குளி­ரூட்­டப்பட்­டி­ருந்த அந்த வீட்டின் பிர­தான கதவை பொலி­ஸாரின் உத­வி­யுடன் உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்ற போதே நால்­வரும் சட­ல­மாக இருந்தமை உறு­தி­யா­னது.

பொலிஸார் உள்ளே சென்று பார்த்த வேளையில் வர்த்­த­க­ரான ஹுஸைன் மெள­லானா பிர­தான கத­வ­ருகே உள்ள கதி­ரை­யொன்­றிலும், அவ­ரது மனை­வி­யான முன்­ஸிரா மெள­லானா வீட்டின் அறை­யொன்­றிலும் 13 வய­து­களை உடைய இரு சிறு­மி­களும் வீட்டின் பிர­தான அறையின் நிலத்­திலும் உயி­ரி­ழந்த நிலையில் இருந்­தனர்.

வீட்டில் இருந்த பெண்ட்ரி கபட் ஒன்று தீயினால் சேத­ம­டைந்­தி­ருந்­ததை அவ­தா­னித்த பொலிஸார் அதன் அருகே இருந்த இலத்­தி­ர­னியல் அவன், பிளெக் டொப் ஆகி­னவும் தீயினால் கரு­கி­யிருந்­ததை அவ­தா­னித்தனர்.

அத்­துடன் வீட்டின் சுவர், நிலத்தில் கறுப்பு நிர துகல்கள் ஒட்­டி­யி­ருந்த நிலையில் ஆங்­காங்கே அதில் கை அச்­சுக்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. அத்­துடன் எரிந்­தி­ருந்த பிளக் டொப் வீசுண்­டி­ருந்­த­துடன் வீட்டின் மின் கட்­ட­மைப்பில் இருந்த ரிப் ஆளி­களில் இரண்டு கீழ் நோக்கி வீழ்ந்­தி­ருந்­தன. இதன் ஊடாக ஏதோ ஒரு கார­ணத்தால் மின் தடைப் பட்­டுள்­ளமை பொலி­ஸா­ரினால் ஊகிக்­கப்­பட்­டது.

ஸ்தலத்­துக்கு விரைந்த தெஹி­வளை பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ரஞ்சித் கொட்­டச்­சியின் நேரடி கட்­டுப்­பாட்டில் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்­தவின் தலை­மையில் குற்­ற­வியல் பிரிவின் அதி­கா­ரி­க­ளினால் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

பொலிஸ் தட­ய­வியல் பிரி­வினர் ஸ்தலத்­துக்கு வருகை தந்­த­துடன் அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்கள், மின்­னியல் பொறி­யி­ய­லா­ளர்­களும் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இதன் போது நேற்று முன் தினம் இரவு 9.00 மணி­ய­ளவில் குறித்த வீட்டின் முன் வீட்டில் வசிக்கும் உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் உற­வி­னர்­க­ளுடன் இந்த குடும்­பத்தார் உரை­யா­டி­யுள்­ளனர். அதன் பின்னர் இரு குடும்­பத்­தாரும் நித்­தி­ரைக்கு சென்­றுள்­ளனர்.

உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் மகளும் அங்கு தங்­கி­யி­ருந்த உற­வுக்­கார சிறு­மியும் நார­ஹேன்­பிட்டி பகு­தியில் உள்ள பிர­பல சர்­வ­தேச பாட­சா­லையில் கல்­வி­கற்று வரு­கின்­றனர். இந் நிலையில் நேற்று காலை அவர்­களை பாட­சா­லைக்கு அழைத்துச் செல்லும் வண்டி வீட்டின் அருகே வந்­துள்­ளது. வண்டி ஒலி எழுப்­பியும் வீட்டில் இருந்து எவ்­வித பதி­லும் கிடைக்­க­வில்லை.

இந் நிலையில் முன் வீட்டில் வசிக்கும் உற­வுக்­கா­ரர்கள் குறித்த வர்த்­த­க­ருக்கு தொலை­பேசி அழைப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். எனினும் அதற்கும் பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்­லை. இத­னை­ய­டுத்து அவ்­வீட்டார் முன் வீட்டை நோக்கி சென்ற போது அங்கு கறுப்பு நிற துகல்கள் உள்­ளி­ருந்து கதவின் கீழால் உள்ள சிறிய இடை­வெ­ளி­யூ­டாக கசி­வதை அவ­தா­னித்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் அளித்­துள்­ள­துடன் கதவை உடைக்கும் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­டுள்­ளனர். இவ்­வி­டயம் பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

குளி­ரூட்­டப்­பட்ட அந்த வீடா­னது முழு­மை­யாக சீல் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், திடீ­ரென எற்­பட்ட மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட புகை­யுடன் கூடிய விஷ வாயுவை அவர்கள் சுவா­சித்­தி­ருக்­கலாம் எனவும் அதன் கார­ண­மாக மூச்சுத் திணறி அவர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்க வேண்டும் எனவும் பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். வர்த்­த­கரின் மனைவி முன்­ஸிரா மெள­லானா அறையில் மர­ண­ம­டைந்­தி­ருந்த விதம், இரு சிறு­மி­யரும் வீட்டின் பிர­தான அறையில் அரு­க­ருகே முகங்­குப்­பற விழுந்­தி­ருந்த நிலைமை, வர்த்­த­க­ரான ஹுசைன் மெள­லானா கதி­ரையி­லேயே உயி­ரி­ழந்­தி­ருந்­தமை ஆகி­ய­வறறை வைத்தே பொலிஸார் இவ்­வாறு சந்­தேகம் தெரி­விக்­கின்­றனர்.

வீட்டின் சுவர்­களில் படிந்­தி­ருக்கும் கறுப்பு நிற துகல்கள் மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட தீயினால் ஏற்­பட்­ட­தாக இருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார், தீ பரவ ஆரம்­பித்த போது முழு வீட்­டையும் புகை சூழந்­து­கொன்­டி­ருக்க வேண்டும் எனவும், வீடு முழு­மை­யாக குளி­ரூட்­டப்பட்­டி­ருந்­த­தாலும் அப்­புகை வெளி­யே­றாமல் வீட்­டுக்­குள்­ளேயே சுற்ற அது விஷ­மாக மாறியி­ருக்கும் எனவும் சந்­தே­கிக்­கின்­றனர்.

அதனை வீட்டில் இருந்த இந் நால்­வரும் சுவா­சித்­தி­ருப்­ப­தாக நம்பும் பொலிஸார் அங்­கி­ருந்து தப்ப அவர்கள் முயற்­சித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். எனினும் வீட்டை முழு­மை­யாக சூழந்­தி­ருந்த புகையால் அவர்­க­ளுக்கு கத­வினை நோக்கி செல்­வது சிர­ம­மாக இருந்­தி­ருக்க வேண்டும் எனவும் சிறு­மிகள் இரு­வரும் முகங்­குப்­பற வீழ்ந்­தி­ருந்­த­மை­யா­னது அவர்கள் தப்­பிக்க ஓடி­யுள்­ளதை காட்டுவதா­கவும், வர்த்­த­கரும் கதவை திறக்க முயன்­றுள்ள நிலை­யி­லேயெ அதன் அருகே இருந்த கதி­ரை­யி­லேயே உயிரை விட்­டுள்­ள­தா­கவும் சந்­தே­கிப்­ப­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

நேற்று பிற்­பகல் ஸ்தலத்­துக்கு கல்­கிஸை மேல­திக நீதிவான் ஜி.ஜி.எஸ். ரண­சிங்க வருகை தந்து சட­லங்­களை பார்­வை­யிட்டார். இதன் போது சட­லங்­களை பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­மாறு அவர் உத்­தரவு பிறப்­பித்தார். இந் நிலையில் நேற்று மாலை களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்திய அதி­கா­ரியும் ஸ்தலத்திற்கு விரைந்து பார்­வை­யிட்­ட­துடன் சட­லங்­க­ளையும் பொறுப்­பேற்று பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­கக கலுபோ­வில வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்றார்.

எவ்­வா­றா­யினும் இந்த நான்கு மர­ணங்­களும் வெளியில் இருந்து வந்த ஒரு­வரால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்­ப­தற்­கான எவ்­வித சான்­று­களும் இல்லை என தெரி­விக்கும் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோத்கர் பிரதீப் நிஸாந்த, திடீ­ரென ஏற்­பட்ட மின்­னொ­ழுக்­கினால் உரு­வான விஷ வாயுவை இவர்கள் சுவா­சித்­தி­ருக்­கலம் எனவும் அதனால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலால் மரணம் சம்­ப­வித்­தி­ருக்­கலாம் எனவும் நம்­பு­வ­தாக குறிப்­பிட்டார். சதி முயற்சி ஒன்­று­டாக இம்­ம­ர­ணங்கள் நிகழ்ந்­துள்­ள­மைக்­கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவானது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே கௌடான வீதியில் நேற்று இச்சம்பவத்தையு அடுத்து நூற்றுக்கனக்கான பொது மக்கள் கூடினர். அப்பிரதேசத்தில் பாரிய போக்கு வரத்து நெரிசலும் காணப்பட்டது.

No comments

Powered by Blogger.