Header Ads



இனவாதிகளை நாம், எதிர்க்க வேண்டும் - அர்ஜீன


சாதி, மத வேறுப்பாடுகளின்றிய சுதந்திரமான நாடு அனைவருக்கும் சொந்தமாக வேண்டுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க சுட்டிக்காட்டினார். அனைத்து இன மக்களையும் கௌரவமான முறையில் நடாத்துவதன் மூலமாக தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்பது தென் ஆபிரிக்கா முழு உலகத்திற்கும் எடுத்தியம்பியுள்ளது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையிலும் மிக இலகுவான முறையில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தலாமென அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். ' தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசியல் யாப்பு சீரமைப்பு' தொடர்பாக ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.

' இந்நாட்டின் சுதந்திரத்தின் பொருட்டு சிங்கள மக்கள் மாத்திரம் அர்பணிப்புடன் செயற்படவில்லை. சிங்களம் , தமிழ் ,முஸ்லீம் என அனைத்து இன மக்களும் அர்பணிப்புடன் செயற்பட்டார்கள். அன்று போல் இன்றும் சுதந்திரத்தின் பின்னர் இவ் இன ஒற்றுமையை இல்லாதொழித்து இனவாத்தை தூண்டும் ஒரு தரப்பினர் இந்நாடடில் வாழ்கின்றார்கள். இவர்களது ஒரே இலக்கு அதிகாரத்துடன் கூடிய வரப்பிரசாதங்களை அனுபவிப்பதாகும். இவர்கள் நாட்டை பற்றியோ அல்லது இந்நாட்டு பிள்ளைகளைப் பற்றி சிந்திப்பதில்லை. இந்நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு இனவாதிகளை நாம் எதிர்க்க வேண்டும். அனைவரையும் கௌரவாமான முறையில் நடாத்த வேண்டும். இச்செயற்பாட்டின் மூலமாக தேசத்தை கட்டியெழுப்பலாமென தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா சுட்டிக்காட்டியுள்ளார். அந்நாட்டின் தேசிய கீதம் ஐந்து மொழிகளில் பாடப்படுகின்றது.  தென்னாபிரிக்காவில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளும் தேசிய கீதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் நாட்டில் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்படுகின்ற பொழுது இனவாதிகள் கோசம் எழுப்புவதை நாங்கள் கண்டோம். இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் எதிர்க்கும் வரையில் எங்கள் நாட்டை நல்வழியில் இட்டுச்செல்ல முடியாதென...' அமைச்சர் அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார்.

' தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசியல் யாப்பு சீரமைப்பு' நிகழ்ச்சி திட்டத்தை மவ்ரட்ட இளைஞர் இயக்கம் ஏற்பாடுச் செய்திருந்தது. மீரிக பிரதேச செயலகத்திற்குட்பட்ட 300ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இக்  கருத்தரங்கில் கலந்துக்கொண்டார்கள். 5 பாடசாலைகளிற்கு அரசியல் சாசனமும் பகிர்ந்தளிக்கப்பட்டது.  அரசியல் யாப்பினை மாற்றஞ் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மக்களே முன்வைத்ததாக இக் கருத்தரங்கில் உரையாற்றிய சட்டதரணி சுதர்சன குணவர்தன தெரிவித்தார்.

' இன்று இவ்வரசியல் அமைப்பினை மாற்ற வேண்டுமென கூறுபவர்கள் யார்? இவ்வரசியல் அமைப்பு முறை மூலமாக அதிருப்தியுற்றவர்களே இவ்யாப்பினை மாற்றியமைக்க வேண்டுமென குரல் எழுப்புகின்றார்கள். அவர்களே இந்நாட்டின் நலன் விரும்பிகள். கடந்த ஜனாதபதி தேர்தலின் பொழுது அப்போதைய ஜனாதிபதியின் ஆட்சி முறைக்கெதிராக இம்மக்களே போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இம்மக்களிடையே கட்சி மற்றும் நிற பேதங்கள் காணப்படவில்லை. அனைவருக்கும் நியாயம் கிட்ட வேண்டுமென்றே இம்மக்கள் கோரினார்கள். அரசியல் அமைப்பினை கருத்திற் கொள்ளாது , அவ்யாப்பில் முன்மொழியப்படுகின்ற அதிகாரங்களை கருத்திற்கொள்ளாத ஆட்சியாளர்களை உருவாக்கும் அரசியல் யாப்பொன்று அவர்களுக்கு தேவைப்படவில்லை. அதிகாரங்கள் ஒரு இடத்தில் குவியும் பொழுது அங்கே நிறைவேற்று அதிகாரம் தோன்றுகின்றது. எனவே எங்கள் நாட்டு நலன் விரும்பிகளின் ஒரே எதிர்பார்ப்பு ஒரே இடத்தில் அதிகாரங்களை குவிக்கும் அரசியல் யாப்பல்ல...' என சட்டதரணி சுதர்சன குணவர்தன குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.