Header Ads



"ஞானசாரரர் தொடர்பில் துரித விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" மகாநாயக்க தேரர்கள்

பௌத்த பிக்குகள் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துமாறு அஸ்கிரி பீடாதிபதி உள்ளிட்ட பௌத்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கோரியுள்ளனர்.

கலகொடத்தே ஞானசார தேரர் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வாரியபொல சுமங்கல தேரரின் நினைவு நாள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது. இவ்வாறான ஓர் நிலையில், பௌத்த பிக்குகளின் வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாரியபொல தேரரை அப்போதைய ஆட்சியாளர்கள் துரோகியாகக் கருதி சிறையில் அடைத்ததாகவும் மற்றும் சிலருக்கு அவர் தேசிய வீரராக தென்பட்டதாகவும் அஸ்கிரி பீடத்தின் சிரேஸ்ட மகாநாயக்கத் தேரர் மெதகம தம்மானந்த தேரர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பொது விடயங்களுக்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் தொடர்பில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் அஸ்கிரி பீடாதிபதி, தம்மானந்த தேரர் உள்ளிட்ட பௌத்த மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.