தண்ணீர் தேடியலைந்த மாணவனை, பலியெடுத்த சாதிவெறி
இந்துத்வா பிஜேபி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேசத்தின் தாமோ நகரின் கிராமம் காமாரியா களன். இங்குள்ள பள்ளியில் தலித் சிறுவர்கள் பள்ளியின் கை பம்பை பயன்படுத்த அனுமதியில்லை. பல காலமாக இந்த தீண்டாமை இருந்து வந்துள்ளது.
இறந்து போன தலித் மாணவன் வீரனின் சகோதரன் சேவாக் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது...
'நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். எனது தம்பி மூன்றாம் வகுப்பு படிக்கிறான். சென்ற செவ்வாய்க்கிழமை அன்று எனது தம்பி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தாகத்தால் பள்ளியில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் அருந்த சென்றுள்ளான். அங்குள்ள உயர் சாதி மாணவர்களும் சில ஆசிரியர்களும் அவனை அங்கிருந்து விரட்டியுள்ளனர். தாகம் தாங்காமல் எனது தம்பி அருகில் கிணற்றில் தண்ணீர் குடிக்க சென்றுள்ளான்.
தண்ணீர் இறைக்கும் போது சிறுவன் ஆனதால் பேலன்ஸ் தவறி கிணற்றில் விழுந்துள்ளான். சில நிமிடங்களில் அவனது உயிர் பிரிந்தது' என்று சோகமாக சொல்கிறான் அந்த தலித் சிறுவன்.
இந்த சம்பவத்தால் கிராமம் கொதித்தெழுந்தது. அதிகாரிகள் மூன்று ஆசிரியர்களை இடை நீக்கம் செய்துள்ளனர். சென்ற செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனை படித்தவுடன் என்னையறியாமல் கண்ணீர் வந்து விட்டது. மூன்றாம் வகுப்பு படிக்கும் பாலகனை தாகத்துக்கு தண்ணீர் தராமல் கிணற்றில் நீரிறைக்கச் சொல்லியுள்ளனர் பாவிகள். சாதி வெறி பிடித்து எதையடா கொண்டு செல்ல போகிறீர்கள் அற்ப பதர்களே!
என்ன கொடுமை! இதற்கெல்லாம் வழிகாட்டல் இஸ்லாத்தில் மாத்திரம்தான் உள்ளது.
ReplyDelete