Header Ads



ஸ்ரீ ரவிசங்கர் மீது குற்றச்சாட்டு, இந்தியா பயணமாவதை கைவிட்ட மைத்திரி

வாழும் கலை அமைப்பு புதுடெல்லியில் ஏற்பாடு செய்துள்ள உலக கலாச்சார விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புது டில்லி செல்லவிருந்த பயணம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

வாழும் கலை அமைப்பினரால் மைத்திரிபால சிறிசேன, நேபாள ஜனாதிபதி பிஜந்தியா தேவி பண்டாரி, சிம்பாப்வே ஜனாதிபதி ரோபேர்ட் முகாபே, ஆப்கானிஸ்தான் பிரதம நிறைவேற்று அதிகாரி அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இன்று தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் இவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியிருந்தனர். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்தார்.

இந்நிலையில்  இந்த நிகழ்வுக்காக மரங்கள் அழிக்கப்பட்டதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் நீதிமன்ற தலையீடுகளை அடுத்து, இந்த நிகழ்வில் பங்கேற்க இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார்.

இந்தியக்குடியரசுத் தலைவர் நிகழ்வில் பங்கேற்க மறுத்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நான்கு வெளிநாட்டுத் தலைவர்களும் இராஜதந்திர நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வில் பங்கேற்காமல் விலகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.