விதைக்கப்பட்ட வித்யாவுக்கு, நீதி கிடைக்குமா..?
-Fathima Amra-
கடந்த மே 13 அன்று வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலை வழக்கு விசாரணை என்ன நடக்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. இலங்கையில் நடைபெறும் இவ்வாறான கொடூரக் கெலைச் சம்பவங்களின் வழக்கு விசாரணைகளின் ஆமை வேகமும் அசமந்தப்போக்கும் இன்னும் பல வித்யாக்களையும் சீமாக்களையும் இழக்கவே வழி செய்யப் போகிறது.
இலங்கையைப் பொருத்த மட்டில் சாதரணமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டால் யாரும் அதைக் கண்டு கொள்ளாதிருப்பதும் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டால் குறித்த ஊரில் அல்லது நாடு தழுவிய ரீதியில் குறித்த அன்றைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அடுத்த நாள் அதனை மறந்து விடுவதும் எழுதப்படாத விதியாக மாறியிருக்கிறது. முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த வித்யாவின் கொலை இதனை படம் படித்துக் காட்டுகிறது. இன மத பேதமின்றி சகல மக்களும் வித்யாவின் கொலையைக் கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
பொலிசாரும் தடல்புடலென சிலரைக் கைது செய்தனர். அவ்வளவுதான் எல்லாமே முடிந்து விட்டது. வித்யாவா அது யார்? எனக் கேட்க்கும் நிலையில் இன்று மக்கள். இலங்கையின் இன்றைய நிலை இது தான். பாதிக்கப்பட்ட வித்யாவின் குடும்பம் இன்று தனியாக போராட வேண்டிய துர்பாக்கிய நிலை. எத்தனை கனவுகளுடனும் எதிர்பார்புகளுடனும் இருந்திருக்கும் அந்தக் குடும்பம். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு சிதைக்கப்பட்ட சீமாவின் நிலையுமிதுதான். இவ்விரு மாணவிகளும் எமது சொத்துக்கள். இருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதற்காக இன மத பேதமின்றி அனைவரும் போராட வேண்டும். குறைந்தபட்சம் வசீம் தாஜுதீனுடைய கொலைக்கு வழக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமாவது இவர்களின் கொலைக வழக்குகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலம் எமது தாய்மார்களுக்கு சீமாக்களையும் வித்யாக்களையும் தக்க வைத்துக்கொள்வது சவாலான ஒன்றாகவே இருக்கப் போகிறது.
Justice delay is justice deny.
ReplyDelete