Header Ads



உண்பதற்காக கொன்ற, கழுகின் வயிற்றில் பாம்பு - திட்டத்தை கைவிட்ட குடிகாரர்கள்


கழுகு ஒன்றை மிகவும் மோசமாக துன்புறுத்தி கொலை செய்த கொலையாளிகள் தொடர்பில் நேற்று முன் தினம் செய்திகள் பரவலாக வெளிவந்த நிலையில் அந்த கொலையாளிகளில் இருவரை நேற்று பகல் ஹபராதுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், குறித்த சந்தேக நபர்களை காலி வஞ்சாவலை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் கைதான நபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் பலரை இன்றைய தினம் கைது செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கழுகு ஒன்றின் தோலை உறித்து கொடூரமாக கொன்றவர்களில் இருவர் நேற்றைய தினம் ஹபராதுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலமும் வழங்கியுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களின் வாக்குமூலத்திற்கு அமைய தாம் உண்பதற்காகவே குறித்த கழுகை கொன்றதாகவும், இதன்போது கழுகின் வயிற்றில் பாம்பு ஒன்று இருந்ததால் தாம் அதை உண்ணவில்லை என்றும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 40 வயதானவர்கள் என்பதோடு இருவரும் மீனவர்கள் என்று தெரிவித்துள்ள பொலிஸார் கழுகை கொன்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் சட்டவிரோதமான மது அருந்தியிருப்பதாகவும் தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளனர் 

No comments

Powered by Blogger.